ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

நந்தவனத்தின் அழைப்பு..

 1.

"இறக்கைகள் வெறும் எடையை மட்டும் சுமப்பதில்லை, 
அவை அடுத்த நந்தவனத்தின் அழைப்பையும்
 நம்பிக்கையுடன் ஏந்திச் செல்கின்றன."

2.
"உங்கள் கனவுகள் 
உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை, 
துணிச்சல் துளிர்விடும் இடத்தில் 
அவை உங்களுக்காகக் காத்திருக்கின்றன."

3.
"மெளனமான நேரங்கள் வெறுமையானவை அல்ல,
 அவை ஆன்மா இளைப்பாறும் ஓய்விடங்கள்."

4.
"கடந்து வந்த கடினமான தருணங்கள் உங்களைச் சிதைப்பதில்லை. 
அவை உங்களது ஆளுமையின் ஆழத்தை மெருகேற்றுகின்றன."

5.
"சில நேரங்களில் தொலைநோக்குப் பார்வையே 
அருகிலுள்ளவற்றைத் தெளிவுபடுத்துகிறது."

6. 
"விழிப்புடன் இருப்பவருக்கே 
வாழ்க்கையின் வெகுமதிகள் கிட்டுகின்றன, 
எளிதாகக் கிடைக்கும் எனக் காத்திருப்பவருக்கு அல்ல."

7.
"தொடர்ச்சியான உழைப்பிற்கு மட்டுமே 
வெற்றி தலைவணங்கும்."

8.
"ஒரே இலக்கைக் கொண்ட இரு இதயங்களுக்கு, 
இடர்பாடுகளும் ஏணிகளாகும்."
*
பறவை பார்ப்போம் - பாகம்: 140
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 229

**

6 கருத்துகள்:

  1. ஆழமான வரிகளுக்கு அழகான படங்கள்

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அதற்கான வரிகளும் நன்று. தொடரட்டும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த படங்களும் அதற்கான வரிகளும்.

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு