ஞாயிறு, 15 மார்ச், 2026

உலகை அறிதல்

 1

“ உலகை அறிதல், 
அதை வியப்புடன் காணக் கற்றுக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.”

2. 

“அமைதியைத் தேர்ந்தெடுக்கும் இடைவெளிகளில்தாம் 
நம் வலிமை வாழ்கிறது.”


3. 
"அனுமானிக்கும் முன் சிந்திக்க வேண்டும். 
புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது."

4. 
"மிகச் சிறிய இறக்கைகளும் 
ஒரு மலருக்கு 
சூரிய ஒளியைக் கொண்டு வர இயலும்."

5. 
“நாம் ‘வெற்றிடம்’ என்று விளிப்பது, 
பெரும்பாலும் நாம் கவனிக்கத் தவறிய அமைதியையே.”

6. 
“தயாரான மனங்கள் 
நளினமாக நகர்கின்றன.”

7. 
"இருக்கும் இடத்திலிருந்தே தொடங்குங்கள். 
வானம் உங்களைச் சந்திக்க வரும்."

8. 
"ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும் 
ஒரு வகையான வலிமையே."

*
பறவை பார்ப்போம் - பாகம்: 139
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 226
**

5 கருத்துகள்:

  1. அழகிய படங்கள் அழகிய வரிகள்.  எப்படி க்ளிக்கினீர்களோ...  அதுவும் இவ்வளவு துல்லியமாக.  முதல் படம் அழகு என்று சொல்லி விட்டு அடுத்தடுத்த படங்களை பார்த்தால் ஒன்றையொன்று மிஞ்சுகிறது.  அருமை.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு படமும் அழகு. அதற்கான வரிகளும் சிறப்பு.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  3. அழகான பறவைகள், அருமையான வாழ்வியல் சிந்தனைகள்

    பதிலளிநீக்கு
  4. ஓ கடவுளே! முதல் படம் என்ன அழகு! பார்த்துக் கொண்டே இருந்தேன். செம க்யூட்! அந்த வண்ணங்கள் ஓ மை ! இயற்கையின் வரப்பிரசாதம்.

    பறக்கும் பறவைகள் சூப்பர். அழகா டக்குனு எடுத்திருக்கீங்க. எப்படி, ரெடியா கேமரா இருக்குமோ?

    கேமராவைத் திறந்து அது ஆன் ஆகி வருவதற்குள் காட்சிகள் மாறிவிடுமே. அதனால்...

    குளத்துக் கொக்கு சூப்பர். எல்லாமே அழகு கூடவே வரிகளும்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. முதல் படத்தில் இருப்பவை பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது பூச்சி பிடிப்பான் (green bee-eater) குஞ்சுகள். அன்று ஜோடிப் புறாக்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பறப்பதும் மீண்டும் கம்பியில் உட்காருவதுமாக இருந்தன ஆகையால் எளிதாக எடுக்க முடிந்தது:).

    கருத்துகளுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு