செவ்வாய், 15 ஜூலை, 2025

நிஜாம்களின் ராஜ்ஜியம்; படைக் கருவிகள் - செளமஹல்லா மாளிகை (ii) - ஹைதராபாத் (7)

 ஹைதராபாத் நகரில், முஸி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செளமஹல்லா மாளிகை 1951ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டு, இந்தியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 

#1

வெவ்வேறு கூடங்களில் அரசர்களைப் பற்றிய விவரங்கள், அரசர், அரசி மற்றும் இளவரசர்களின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

#2

#3


#4
#5

#6


#7

#8


மன்னர்கள் போருக்குச் செல்லும் காட்சி, வேட்டையாடிய விலங்குகள் மேல் வெற்றிப் பெருமிதத்துடன் அமர்ந்திருக்கும் காட்சிகள்  ஆகியவற்றையும் பார்க்கலாம்:

#9

#10
[மிக உயரத்தில் மாட்டப்பட்டிருந்த படம் ஆகையால்
கோணம் இப்படி சரிவாகவே கிடைத்தது.]
#11
[இந்நாளைப் போலன்றி, விலங்குகளை வேட்டையாடுவது பொழுதுபோக்காகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்ட காலம்.]

ற்றுமொரு பெரிய கூடத்தில் அரச குடும்பத்தினர் உபயோகித்த பொருட்கள், சீன பீங்கான் பாத்திரங்கள், கண்ணாடி பொருட்கள் காட்சிக்கு இருந்தன.

#12


#13


#14

(கோப்பைகளில் அரசர்களின் உருவப்படங்கள்.)

உணவு மேசையில் அரசர்கள் விருந்து உண்ணும் அரிய புகைப்படமும் பெரிதாக்கப்பட்டு காட்சிக்கு இருந்தது:

#15


ஓவியங்கள், சிற்பங்கள், நாணயங்கள், கைவினைப்பொருட்கள், மரச்சிற்பங்கள் மற்றும் பழங்கால மரச்சாமான்கள் ஆகியனவும் காட்சிக்கு இருந்தன.

டை வீரர்கள் உபயோகித்த விதம் விதமான  ஆயுதங்கள் உயரமான கூரை கொண்ட ஓர் கூடத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

#16

#17

#18

#19

#20


#21


#22

#23

மன்னர்களின் படைக்கலங்களைப் பற்றிய தகவல்கள்:

#24

தளபதிகளும் படை வீரர்களும்:

#25


#26

அரண்மனையின் தாழ்வாரமும் அங்கிருந்த ஆதிகாலத்தைய மர அலமாரிகளும்:

#27


#28


#29

மன்னர்கள் பயன்படுத்திய குதிரை வண்டிகள் மற்றும் அந்நாளைய வாகனங்கள் (கார்கள்) ஆகியனவும் உள்ளன. கார்கள் இருந்த பகுதிக்கு செல்ல நேரம் இருக்கவில்லை. குதிரை வண்டி உங்கள் பார்வைக்கு:

#30

தர்பார் அரங்கு மற்றுமோர் கோணத்தில்..

#31

அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த சேகரிப்புகள் நிஜாம்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதோடு வரலாற்றையும் பண்பாட்டையும் நமக்கு அறியத் தருகின்றன. அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு இருந்த திறமை, புலமை மற்றும் செல்வாக்கை வெளிப்படுத்துகின்றன. சுற்றுலா, கல்வி, ஆய்வு ஆகியவற்றை ஊக்குவித்து, கலாச்சார பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன.

#32


*
தொடர்புடைய முந்தைய பதிவு:
**

8 கருத்துகள்:

  1. மிக அருமையான படங்கள்.
    வரலாறை சொல்லும் படங்கள்.
    நிஜாம்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது படங்களின் வாயிலாக.தர்பார் அரங்கம் அழகு.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான படத்தொகுப்பு.  புலிகளையும், யானையையும் கொன்று அதன்மேல் அமர்ந்திருக்கும் காட்சி இந்தக் காலத்தில் பார்க்க ரசிக்கவில்லைதான்.

    பதிலளிநீக்கு
  3. தகவல்களும் படங்களும் நன்று. அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படியான அருங்காட்சியகங்களில் பார்க்கக் கிடைக்கும் அனைத்துமே எனக்கும் பிடிக்கும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அவ்வாறே:). இயன்றவரை பார்த்த அனைத்தையும் பகிர்ந்துள்ளேன். நன்றி வெங்கட்.

      நீக்கு
  4. படங்கள் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை!!!! அத்தனையும் அழகு. தகவல்களும் மிகவும் நன்று. ராஜ வாழ்க்கை என்பது இதுதான் போலும்!!

    பொழுது போக்கிற்காக விலங்குகளை வேட்டையாடுவது என்பது மனதைக் கஷ்டப்படுத்தும் விஷயம். இப்பவும் என்ன உலகில் ஆங்காங்கே போர்கள் நடந்து கொண்டேதானே இருக்கின்றன ஆணவத்தாலும் அதிகாரத்தாலும். மனிதர்களும் விலங்குகளும் தானே பாதிக்கப்படுகின்றன இல்லையா?

    மேலே உள்ள படத்தை எடுத்த விதத்தை ரசித்தேன் நன்றாக வந்திருக்கிறது ராமலஷ்மி.

    எனக்கும் இப்படிப் பார்ப்பதும் புகைப்படங்கள் எடுப்பதும் மிகவும் பிடித்த விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வேட்டைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் சிலர் வேட்டையாடுவதும் கைதாவதும் செய்திகளில் பார்க்கிறோம். போர்கள் இல்லாத உலகம்.. மெய்ப்பட வேண்டும். படங்களை ரசித்ததற்கும் கருத்துகளுக்கும் நன்றி கீதா.

      நீக்கு