சனி, 26 ஏப்ரல், 2025

நம்பிக்கை கீதம்

 #1

“மிகச் சிறிய பறவை கூட வானத்தைப் பற்றி கனவு காணலாம்.”

#2
“தேர்வு செய்ய எல்லா சுதந்திரமும் உங்களுக்கு உள்ளது, 
ஆனால் உங்கள் தேர்வின் விளைவுகளிலிருந்து 
உங்களுக்கு சுதந்திரம் இருப்பதில்லை.”


#3
“இரவுக் கோட்டான் இருளைக் கண்டு அஞ்சுவதில்லை, அது தன் ஒளியை தனக்குள்ளேயே கண்டுகொள்கிறது.”


#4
 “அசைவற்றிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள், 
சில நேரங்களில் அசைவற்ற நிலையில் இருந்தே 
ஆழமான அமைதி கிட்டுகிறது.”


#5
விடியலை எவ்வளவு கனமாக உணர்ந்தாலும், 
நம்பிக்கையுடன் எழ வேண்டியதை 
ஒரு பறவையின் சங்கீதம் 
எப்போதும் நமக்கு நினைவூட்டுகிறது.”


#6
“தன்னம்பிக்கை என்பது 
‘மற்றவர்கள் என்னை விரும்புவார்கள்’ 
என்பதில் இல்லை.  
‘மற்றவர்கள் என்னை விரும்பாவிட்டாலும் 
நான் நன்றாகவே இருப்பேன்’ 
எனச் செல்வதில் உள்ளது.”


*

பறவை பார்ப்போம் - பாகம்: 121

**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]

***

4 கருத்துகள்:

  1. பறவைகள் ஒலியால் ஏற்படும் விடியலின் சங்கேதங்கள் இனிமையானவை.  மற்றவர்கள் தன்னை விரும்புமாறு நடந்து கொள்வதும் நல்லது!!

    வரிகளையும், படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. யாரோ ஒருவர் ஏதோ ஒரு அனுபவத்தில் சொன்ன மொழி நமக்கும் ஏதோ ஒரு நேரத்தில் பொருந்திப் போய் விடுவதுண்டு.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. விடியலை நம்பிக்கையுடன் எழும்ப சொல்லும் பறவைகளின் கீதம் அருமை.
    பறவைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    பறவைகள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு