ஞாயிறு, 28 ஜனவரி, 2024

இயற்கையின் அற்புதங்கள்

  #1

“சிறு விவரங்கள் யாவும் இன்றியமையாதவை. 
சிறிய செயல்களே 
பெரிய செயல்கள் நிகழக் காரணமாக இருக்கின்றன.”
_ John Wooden



#2
“ஒரே இரவில் உங்கள் இலக்கை மாற்றிக் கொள்ள இயலாது, 
ஆயின் ஒரே இரவில் நீங்கள் செல்லும் திசையை 
மாற்றிக் கொள்ள இயலும்.”
_ Jim Rohn

#3
“உங்களிடம் இருக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றியுடையவராக இருங்கள், 
நீங்கள் இருக்கும் நிலையிலேயே 
நிறைந்த மகிழ்ச்சி கிட்டும்.”

#4
“பூவின் ஒவ்வொரு இதழிலும் 
நிரம்பி நிற்கும் கதிரொளியை 
ஆரத் தழுவிக் கொள்ளுங்கள்.”



#5
“இயற்கையின் அனைத்திலும் 
ஏதோ ஒரு அற்புதம் இருக்கிறது.”


#6
“முடிவுறுபவற்றைக் கொண்டாடுங்கள், 
புதிய ஆரம்பங்களுக்கு அவை வித்திடுவதால்.”
_ Jonathan Lockwood Huie

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 190

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. படங்களும், அவைகளுடன் அணிவகுக்கும் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. இயற்கையின் அற்புதம் அருமை. மலர்கள் அழகு, அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை. இயற்கையின் அனைத்திலும் ஏதோ அற்புதம் இருப்பது உண்மை.

    பதிலளிநீக்கு