ஞாயிறு, 22 அக்டோபர், 2023

மகாபாரதம் - நவராத்திரி பொம்மைக் கொலு 2023 - (பாகம் 1)

 #1 

கீதா உபதேசம்

வழமை போல இந்த வருடமும் நான் கண்டு களித்த கொலுக்கள் மற்றும் அவற்றில் அணிவகுத்திருந்த பொம்மைகளை இரு பாகங்களாகக் காட்சிப் படுத்தவிருக்கிறேன். தங்கை வீட்டுக் கொலுவில் இந்த வருடப் புது வரவாக மகாபாரதக் கதையை மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருந்தார். ஞாயிறு பதிவாக, முதல் பாகத்தில் சில மகாபாரதக் காட்சிகள்:
#2
“எச்சரிக்கையுடன் இருப்பவர்களே வெல்ல வேண்டுமென்பது 
இயற்கையின் விதி.”


#3
“நான் அழகின் அடையாளம் அல்ல. 
நான் உறுதி, தைரியம் மற்றும் 
மீண்டெழும் திறன் ஆகியவற்றின் அடையாளம்.”
பின்னால் கூனிக் குறுகி அமர்ந்திருக்கும் 
பீஷ்மர் மற்றும் சபையினர்

#4 
பாஞ்சாலிக்கு அருளும் கிருஷ்ண பரமாத்மா


#5
சங்கே முழங்கு

#6
“மகிழ்ச்சி துயரம், 
நஷ்டம் லாபம், 
வெற்றி தோல்வி ஆகியவற்றை 
ஒன்றாகப் பாவித்து 
கடமைக்காகப் போராடு. 
உன் பொறுப்பை இவ்வாறாக நிறைவேற்றுதன் மூலம் 
நீ குற்றத்துக்கு ஆட்பட மாட்டாய்!”

#8
சக்கர வியூகம்


#9 
“துணிச்சல்சாலி என்பவன் 
தான் தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தும் 
இறுதிவரையிலும் நியாயத்துக்காகப் போராடுகிறவன்.”

#10
“மெளனம், கண்டும் காணாதிருத்தல்..
கண்டும் காணாமை, வஞ்சனை..
வஞ்சனை, குற்றம்..
குற்றம், தண்டனைக்குரிய செயல்..”
அம்புப் படுக்கையில் பீஷ்மர்

#12
“வாழ்வின் அநியாயங்கள் 
நேர்மையற்ற பாதையில் செல்வதற்கான உரிமத்தை 
உங்களுக்கு வழங்குவதில்லை.”


#13
இறுதியில் தர்மமே வெல்லும்

#14
“நல்லதே செய்யும் எவருக்கும் 
முடிவு ஒருபோதும் கெட்டதாக இருப்பதில்லை, 
இவ்வுலகிலும் வரவிருக்கும் உலகிலும்.”


தங்கை, ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான பகவத் கீதை வாசகத்தையும் ஆங்கிலத்தில் காட்சியில் வைத்திருந்தது வந்திருந்தவர் கவனத்தைக் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்றது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு தமிழாக்கம் செய்து அளித்துள்ளேன்.

#15
நவராத்திரி, ஆயுத பூஜை,
விஜயதசமி நல்வாழ்த்துகள்!

மேலும் படங்கள் அடுத்த பாகத்தில்..

***

6 கருத்துகள்:

  1. பிரமாதம். அரிய, அழகான செட் பொம்மைகள். விளக்கங்களும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசமாக இருக்கு. ஏதோ ம்யூஸியம், அரண்மனையைப் பார்த்தது போன்று காட்சிகள் பொம்மைகள் அதை நீங்கள் எடுத்த விதம் லைட்டிங்க்!!! மனதைக் கட்டி போடுகின்றது. பகவத் கீதை வாசகங்களும்....செட்டாகக் கிடைக்கிறது இல்லையா. ஆனால் பொம்மைகளின் தரம் வித்தியாசமாக மிக அழகாக இருக்கின்றது...

    பூஜை வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மகாபாரத கொலு அருமை. படங்கள் துல்லியம். படங்களும் அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் கீதை வாசகங்கள் அருமை.

    பதிலளிநீக்கு