ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

பதில்களால் நிரம்பிய மெளனம்

 #1

“எதுவும் உங்கள் மன நிம்மதியைக் குலைத்துவிடாதபடி 
மிக உறுதியாக இருப்பதாக 
உங்களுக்கு நீங்களே உறுதிமொழி கொடுங்கள்.”
_ Christian Larson.


#2

"மெளனம் வெறுமையானதன்று, முழுக்க முழுக்க விடைகளைக் கொண்டது."


#3
"நினைவுகள் அழிவதில்லை, 
ஆனால் காலப்போக்கில் மங்கி விடுகின்றன."


#4
'சவால்களை தலை நிமிர்ந்து எதிர் கொள்ளுங்கள், 
உங்கள் கனவுகளை 
பயத்திடம் ஒப்படைத்து விடாதீர்கள்!' 
_ Frank Sonnenberg

#5
“உங்களது இலக்கை அடைய விடாமல் 
உங்களைத் தடுக்கும் எதையும் 
அனுமதிக்காதீர்கள்.”
#6
“தேசியக் கொடியின் மூவண்ணம் 
உங்கள் வாழ்வை 
ஆற்றல், அமைதி மற்றும் வளர்ச்சியால் 
நிரப்பட்டும்!”
[15 ஆகஸ்ட், சுதந்திர தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்.]
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 179

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. சொல்றது ரொம்ப ஈஸி லார்சன்!!  ரோஜாவே யோசிக்கிறது!

    மௌனமாய் பார்க்கும் அடுக்கு மலர்களின் பின்னே ஒளிந்திருக்கிறது விடைகள்!

    மங்கி விட காரணம் 'குவியும் கவன' முக்கியத்துவம் மற்றவைகளுக்கு செல்வதால்..

    பயங்களுக்கு சிவப்பு மலர்கள் தடை சொல்கின்றன!

    மஞ்சள் சிவப்பாகும் முன் பச்சைக்கு முன்னேறி விடுங்கள்!

    வார்த்தைகளை மறந்து, கற்பனையைத் துறந்து ரசிக்க வைக்கிறது கடைசி படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு கருத்தையும் ரசித்தேன். முதலாவது உண்மை, உண்மை! 4 & 5 அட, அட :)! மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கடைசிப் படம் உங்கள் கற்பனை அருமை. எல்லாப்படங்களுமே செம.

    தேன் உறிஞ்சும் தேனீ உள்ள பூ ஆஹா!

    வரிகளும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்களும் , அவற்றிற்கு நீங்கள் சொன்ன பொன்மொழிகளூம் அருமை.
    மெளனம் வெறுமையானது இல்லை, முழுக்க முழுக்க விடை களை கொண்டது என்று தெரியும் 20 வருடம் மெளன விரதம் இருந்த எனக்கு.
    இப்போது வீட்டில் பேச ஆள் இல்லா மெளனமும் கேள்விகளையும், விடைகளையும் அளித்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு நிலை எனக்கு வரும் அதை கடந்து ஆக வேண்டும் என்று மெளனம் இருந்தேன் போலும் முன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமையில் மெளனம் ஆழமான வலியுடனானது. நீங்கள் சொல்வது போல விடைகள் மட்டுமல்ல நம் கேள்விகளாலும் நிரம்பியதே மெளனம். கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு