ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

இலை துளிர் காலம்

 #1

“ஒவ்வொருவரும் அமர்ந்து கவனிக்க வேண்டும் 
இலைகள் எப்படித் துளிர்க்கின்றன என்பதை.”
_ Elizabeth Lawrence

#2
“உண்பது அத்தியாவசியத் தேவை, 
ஆனால் புத்திசாலித்தனமாக உண்பது ஒரு கலை.”
_ La Rochefoucauld.

#3
“தற்போதைய நிலைமையைக் கொண்டு சிக்கிக் கிடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். 
வாழ்க்கை மாறும், உங்களாலும் மாற முடியும்.”
_ Ralph Marston.

#4
“தயக்கம் உங்களை எங்கேயும் இட்டுச் செல்லாது.”

#5
“சிலநேரங்களில் எதுவும் செய்யாமல் அமர்ந்திருப்பதில், 
ஆன்மா ஞானத்தை சேகரிக்கிறது.”

#6
“உங்களால் முடியாதென நீங்கள் நினைத்தால், 
செய்ய மாட்டீர்கள்.
உங்களால் முடியுமென நினைத்தால், 
செய்வீர்கள்!”

#7
“எதிர்பாராத ஆச்சரியங்களைப் போலச் 
சிறந்தவை வேறில்லை, 
நீங்கள் அதற்குத் தயாரெனில்.”

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 174
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

9 கருத்துகள்:

  1. அழகிய அணில் சொல்லும் பாடங்கள் யாவும் நன்று.

    பதிலளிநீக்கு
  2. மிக அழகான அணில் படங்கள். அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அணில் படங்களும் அதற்குத் தகுந்த பொன்மொழிகளும் சிறப்பு. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா!! அணிலின் ஒவ்வொரு போஸும் செம அழகு....ரசித்துப் பார்க்கிறேன். மனம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆன்மஞானத்தை சேகரிக்கும் அணில் புகைப்படம்!!!!!! நிஜமாகவே ஒரு யோகா ஆசனம் போலவே இருக்கிறது!!

    ஹையோ ஒவ்வொரு வாசகமும் புகைப்படத்துக்கு ரொம்பப் பொருந்திப் போகிறது. அனைத்தும் அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு