ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

ஓயாத அலைகள்

 #1

கனவைக் கட்டமையுங்கள். 
கனவு உங்களைக் கட்டமைக்கும்.
(மணிப்புறா)
#2
வியப்பு 
பேரார்வத்தின் தொடக்கம்.
( காட்டு மைனா)

#3
நம்மிடமிருப்பதெல்லாம்
 இக்கணம் ஒன்றே.
 (ஆசிய ஆண் குயில்)
#4
வாழ்வின் மிக ஆழமான உணர்வுகள் 
பெரும்பாலும் மெளனத்தால் வெளிப்படுத்தப்படுகின்றன.
(இந்திய சாம்பல் இருவாச்சி)
#5
உங்கள் கால்களைச் சரியான இடத்தில் ஊன்றுகிறீர்களா என்பதை 
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், 
பிறகு திடமாக நில்லுங்கள்.
_ Abraham Lincoln.
(ஆசிய பெண் குயில்)

#6
இதோ இங்கே இருக்கிறேன், 
தொடர்ந்து செல்கிறேன், 
தெரியுமா உங்களுக்கு, 
அலைகளைப் போன்று.
_ Angela Lansbury
(வெண் கன்னக் குக்குறுவான்)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 172
பறவை பார்ப்போம்.. - பாகம்: 102
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

7 கருத்துகள்:

  1. தோட்டத்துக்கு வந்த பறவைகள் அழகு அழகு.
    இதோ இங்கு இருக்கேண் என்று சொல்லும் பறவை அழகு.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளின் பெயர்களை சேர்க்க மறந்து விட்டிருந்தேன். உங்கள் கருத்துரையைப் பார்த்த பின் நினைவுக்கு வந்து சேர்த்து விட்டேன். கடைசிப் படத்தில் இருப்பது வெண் கன்னக் குக்குறுவான் (white-cheeked barbet). நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. பறவைகள் எல்லாமே அழகு. அதுவும் இங்கே இருக்கிறேன் என்று சொல்லும் வெண் கன்னக் குக்குறுவான் செம அழகு. என்ன அழகாகக் கழுத்தை ஒடித்துத் திரும்பிப் பார்க்கிறது யாருடா இது நம்மை ஃபோட்டோ எடுப்பத்துன்னு பாக்குதோ?!!

    வரிகளும் அருமை. அனைத்தும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எனக்கும் அப்படிதான் தோன்றியது.

      நீக்கு
    2. யாருடா என அடிக்கடித் திரும்பிப் பார்த்து விட்டு, பின்னர் மரங்கொத்தியைப் போல மரத்தைக் கொத்திக் கொண்டிருந்தது:).

      நன்றி கீதா :). நன்றி ஸ்ரீராம் :).

      நீக்கு
  3. முதல் இரண்டு படங்கள் வரிகளுக்கு அப்படி பொருந்திப் போகின்றன! அதே போல வயதான தோற்றம் போல இருக்கும் இந்திய சாம்பல் இருவாட்சி படமும் உடன் ஒட்டிநிற்கும் வரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சில நேரங்களில் நன்கு பொருந்தும் வரிகளாகக் கிடைத்து விடுகின்றன :) ! நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு