ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அச்சம் தவிர்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 129
பறவை பார்ப்போம்.. - பாகம் 81
#1
"உங்களுக்கானது உங்களைக் கண்டடையும்." 
_ Imam Ali

#2
"ஒன்றைக் கண்டு அச்சம் கொள்வதைக் காட்டிலும் 
அது உங்களுக்குத் தேவை என்பதில் தீர்மானமாக இருங்கள்." 
_ Bill Cosby

#3
“நிதானமாகச் சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், 
ஆனால் செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டால் 
சிந்திப்பதை நிறுத்தி விட்டுக் காரியத்தில் இறங்குங்கள்.” 
_ Napoleon Bonaparte

#4
"உங்கள் திறமைகளை 
நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்."

#5
"நீங்கள் முடிவை எடுக்காதிருந்தால், 
வாழ்க்கை உங்களுக்கான முடிவை எடுக்கும்." 
_ Marty Rubin


#6
“காத்திருக்க நாம் முன்வருவது,  
எதற்காகக் காத்திருக்கிறோமோ 
அதன் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பை வெளிப்படுத்துகிறது.”
_ Charles Stanley
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

11 கருத்துகள்:

  1. பொன்மொழிகளும், பறவைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த வாசகங்களும் மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் சேமிப்பும் பகிரவும்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அருமை.  பொன்மொழிகளை.  நெப்போலியன் சொல்லி இருப்பது "எண்ணித்துணிக கருமம்'" குறளை நினைவுபடுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பொன்மொழிகளும்"  என்றிருக்கவேண்டும்!  அதை இரண்டாவது தெரிவாகக் கொடுத்திருந்திருக்கிறது கூகுள்!

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம். மீள் வருகைக்கும் திருத்தத்திற்கும்:)!

      நீக்கு
  4. படங்கள் அத்தனையும் அழகு. அவற்றோடு பொன்மொழிகளின் தமிழாக்கமும் அருமை

    நானும் பறவைகளை எடுக்கிறேன் தான் !!!!! ஆனால் சின்ன பறவைகள் எதுவும் ஜூம் செய்தாலும் இத்தனை க்ளியராக வருவதில்லை. பெரிய பறவைகளும் கூட...
    ரொம்பத் தெளிவாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரிகளுக்குச் சென்று எடுக்கும் போது எனக்கும் 300mm zoom போதுமானதாக இருப்பதில்லை. வீட்டுத் தோட்டத்தில் என்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. மிக்க நன்றி கீதா.

      நீக்கு
  5. பறவைகளும் பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகான தங்கள் வருகையில் மகிழ்ச்சி. நன்றி மாதேவி.

      நீக்கு