ஞாயிறு, 7 நவம்பர், 2021

தேவகி சிங்கமே தாலேலோ.. - ஆயர்பாடி மாளிகையில்.. கிருஷ்ணாவதாரம்.. (பாகம் 1)

 #1

ஆயர்ப்பாடி மாளிகையில்..

“சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ”
_பெரியாழ்வார் திருமொழி


#2
ஒருத்தி மகனாய்ப் பிறந்து..


#3
ஓரிரவில்..

#4
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர..


#5
பாலகிருஷ்ணாவின் முதல் அசுரவதம்
பூதனை வதம்


#6
மைந்தனின் குறும்புகளைப் பொறுக்க மாட்டாமல் அன்னை யசோதை பாலக் கிருஷ்ணரை உரலில் கட்டிப் போட, அதை அவர் இரட்டை மருத மரங்களுக்கு நடுவே தவழ்ந்தபடி இழுத்து வந்து நாரதரால் சபிக்கப்பட்ட குபேரப் புத்திரர்கள் நளகூபரனுக்கும் மணிக்ரீவனுக்கும் சாபவிமோசனம் அளிக்கும் காட்சி..

#7
‘உள்ளங்கவர் கள்வனடி..’

#8
வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டுகின்ற பாலகிருஷ்ணர்

ரசனையுடன் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஆடை, அணிகலன்களுடன் திகழும் இந்தக் கொலுப் பொம்மைகள் யாவும்  வடக்கிலிருந்து பிரத்தியேகமாக தங்கை தருவித்தவை. கிருஷ்ணாவதாரப் படங்கள் மேலும் ஓர் பதிவாகத் தொடரும். 

தீபாவளி கொண்டாட்டங்கள் அனைவருக்கும் இனிதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் நரக சதுர்த்தி நாளில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கருத்து உண்டு, இல்லையா? அந்த வகையில் தீபாவளியை வாரத்தின் ‘ஞாயிறு’ பதிவாக இந்தத் தொகுப்பு பொருந்திப் போகிறதென நம்புகிறேன்:). அனைவருக்கும் தாமதமாக எனது நல்வாழ்த்துகள், இந்த தீபாவளிக்காக ஃப்ளிக்கரில் பகிர்ந்த 7 கப் பர்ஃபி படத்துடன்..!


***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

தொட்டது துலங்கட்டும்..! - விஜயதசமி வாழ்த்துகள்..! - 2021

* நவராத்திரி வாழ்த்துகள் ! - 2018

* ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்.. - 2017

****

8 கருத்துகள்:

  1. எழுதிய விதமாகவே அனைத்து பொம்மைகளும் அழகான வடிவமைப்புடன் உள்ளது. மிக நேர்த்தியான காட்சிகள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான படங்கள், கிருஷ்ணாவதார கதையும் பாடலும், விளக்கும் அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பொம்மைகளை நீங்கள் படம் எடுத்த விதம் ரொம்ப அழகு அருமையாக இருக்கிறது. விளக்கங்கள் உட்பட.

    தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு