ஞாயிறு, 6 ஜூன், 2021

புது பலம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)

#1
“மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. 
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி 
எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. 
மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் தீர்மானித்தாலன்றி 
எந்தவொரு நபராலும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த முடியாது. 
உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வராது. 
அது உங்களிலிருந்து மட்டுமே வர முடியும்.”
                                                                        _ Ralph Marston


#2
“நீ யார், என்னவாக இருக்கிறாய் என்பன 
முழுக்க முழுக்க உன்னைப் பொறுத்ததே!”



#3
“பெயரில் என்ன உள்ளது? 
ரோஜாவை நாம் வேறெந்தப் பெயரால் அழைத்தாலும் 
அது இனிதாக மணக்கவே போகிறது!”
_William Shakespeare

#4

"புது நாளின் கூடவே வருகின்றன 
புது பலமும் புதிய சிந்தனைகளும்..!"


#5

"உங்கள் சிந்தனைகளுக்கு நடுவேயான இடைவெளியில் உள்ளது 
உங்களது உண்மை." 
_ Reuben Lowe

#6

 "அழகிய வண்ணங்களாலும் நேர்மறை ஆற்றலினாலும் 
எதிர்மறை எண்ணங்களை 
மெல்ல மெல்லப் புறந்தள்ளுங்கள்."

**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.. ] 
***

14 கருத்துகள்:

  1. அனைத்துப் படங்களும் அட்ட்காசம். மிகவும் ரசித்தேன். கூடவே வரும் வாசகங்களும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மலரும் மணமும் போல் மனம் கவர்ந்தது புகைப்படங்களும் அற்புதமான கருத்துரைகளும்...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. மிக அழகாக மலர்களை புகைப்ப‌டமெடுத்திருக்கிறீர்கள்! கூடவே அத‌ற்கேற்ற அருமையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  4. அழகான மலர்கள், அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. 101 வது பாகத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்கள்.  அருமையான வாசகங்கள்.  அதிலும் குறிப்பாக முதல் இரண்டும் எனக்காகவே சொல்லப்பட்டிருப்பது போல எடுத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருமே மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய நல்ல வாசகங்கள் அவை. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஒவ்வொரு படமும் அழகு. தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு