ஞாயிறு, 27 ஜூன், 2021

மகிழ்ச்சி என்பது..

 #1

"மகிழ்ச்சி என்பது 
எதையாவது எதிர்நோக்கிக் காத்திருப்பதில் உள்ளது." 

#2

சில சமயங்களில் நம்மால் செய்ய முடிவதெல்லாம், 
விடாமல் பற்றிக் கொண்டிருப்பதுதான்.

#3

"வாழ்க்கை இலகுவாவதில்லை. 

ஞாயிறு, 20 ஜூன், 2021

கண்ணால் பார்ப்பதும்.. காதால் கேட்பதும்..

பூனைகள்.. பூனைகள்..

#1

ஒன்று உங்களுக்கு சவாலாக இல்லையெனில், 
அது உங்களிடத்தில் எந்த  மாற்றத்தையும்  ஏற்படுத்தாது.

#2

எனது வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்த்திராத வரையில், 
என்னை மதிப்பிட முயன்றிடாதீர்கள்! 

#3

“உங்கள் காதுகள் கேட்பது ஒன்றாகவும், 
உங்கள் கண்கள் பார்ப்பது வேறாகவும் இருக்கையில்,

செவ்வாய், 15 ஜூன், 2021

வால் காக்கை ( Rufous Treepie )

வால் காக்கை

#1
ஆங்கிலப் பெயர்: Rufous Treepie 

விவசாய நிலங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் பொதுவாகத் தென்படக் கூடியதுதான் இப்பறவை என்றாலும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறைக் காணக் கிடைத்தது. தென்னை மர இலையின் கீற்றுகளுக்குள் மறைந்து கொண்டு போஸ் கொடுக்க மறுத்தாலும் என்ன வகைப் பறவை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு படம் எடுத்து வைத்தேன் அப்போது. இணையத்தில் தேடி வால் காக்கை எனக் கண்டு பிடித்து, எங்கள் குடியிருப்பில் வசிக்கும் மற்றுமொரு பறவை ஆர்வலரிடம் கேட்டு உறுதியும் படுத்திக் கொண்டுக் காத்திருந்தேன், காத்திருந்தேன்.. மீண்டும் கண்ணில் பட:). ஒருவாறாக சமீபத்தில் சரியாக உலகச் சுற்றுச் சூழல் தினத்தன்று கிடைத்தது வால்காக்கை ஜோடிப் பறவைகளின் தரிசனம். படமெடுக்கவும் நன்கு ஒத்துழைத்தன:).

#2

உயிரியல் பெயர்: Dendrocitta vagabunda

காக்கையைப் போன்ற கருந்தலையும் அலகும், சாம்பல் நிறத்தில் வெள்ளை நிறப் பட்டைகளையும் கருப்பு முனையையும் கொண்ட  நீண்ட விறைப்பான வாலும், மஞ்சளும் பழுப்பும் கலந்த இலவங்கப்பட்டை நிற உடலும் இவற்றைச் சட்டென அடையாளம் காண உதவும். 

#3


வேறு பெயர்கள்: 
செம்பழுப்பு வால் காக்கை; அரிகாடை; முக்குறுணி; 
மாம்பழத்தான் குருவி; கொய்யாப் பழத்தான் 

#4

ஞாயிறு, 6 ஜூன், 2021

புது பலம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)

#1
“மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு. 
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி 
எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. 
மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் தீர்மானித்தாலன்றி 
எந்தவொரு நபராலும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த முடியாது. 
உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வராது. 
அது உங்களிலிருந்து மட்டுமே வர முடியும்.”
                                                                        _ Ralph Marston


#2
“நீ யார், என்னவாக இருக்கிறாய் என்பன 
முழுக்க முழுக்க உன்னைப் பொறுத்ததே!”



#3
“பெயரில் என்ன உள்ளது? 

செவ்வாய், 1 ஜூன், 2021

சொல்வனம் இதழ் 247 - பாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள் (5 - 8)

  

நான்கு கவிதைகளின் தமிழாக்கம்..

கவிதை


ப்போது அந்த வயதினில் ... கவிதை
என்னைத் தேடி வந்தடைந்தது. எனக்குத் தெரியாது,
பனிக்காலத்தில் இருந்தா அல்லது நதியில் இருந்தா,
எங்கிருந்து அது வந்தது என எனக்குத் தெரியாது.
எப்படி அல்லது எப்போது என எனக்குத் தெரியாது,
அல்ல அவை குரல்கள் அல்ல, 
அவை வார்த்தைகள் அல்ல, மெளனமும் அல்ல,