சனி, 21 டிசம்பர், 2019

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை, பெங்களூரு

#1

பெங்களூரின் கே.ஆர் மார்க்கெட் (Krishna Rajendra Market or City Market) அருகில் இருக்கும் திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை ( Tipu Sultan's Summer Palace ), மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் கோடைக்காலங்களில் வந்து தங்கும் இல்லமாக இருந்தது.

#2


 #3



#4
மரம், கல், காரை, சுண்ணாம்புக் கலவை மற்றும் மென்சாந்துக் கலவையால் நேர்த்தியாக உருவாக்கப் பட்ட இந்த அழகிய அரண்மனை கி.பி 1781_ஆம் ஆண்டு நவாப் ஹைதர் அலியால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின்னர் திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் வேலைகள் தொடரப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின் கி.பி 1791_ஆம் ஆண்டில் முழுமை பெற்றது.  இந்தோ-இஸ்லாமிக் கட்டிடக் கலைக்குச் சிறந்த உதாரணமாகப் போற்றப்படுகிறது.

நான்காம் ஆங்கில-மைசூர் போரில் திப்பு சுல்தானின் காலமான பின், பிரிட்டிஷ்  அரசாங்கத்தின் செயலகம் 1868_ஆம் ஆண்டுவரை இந்த அரண்மனையில்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. அதன் பின்னரே அட்டர கச்சேரிக்கு மாறியது. அதைப் பற்றியக் குறிப்பை எனது ‘இந்தப் பதிவில்’ காணலாம்.

தற்போது எல்லை சுருங்கி விட்ட பெங்களூர் கோட்டை இந்த இடத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருப்பினும் அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் பெங்களூர் கோட்டையின் விரிந்த வளாகத்துள்ளேயே அரண்மனை இருந்திருகிறது. ஸ்ரீ வெங்கடரமணா கோவில் அரண்மனைக்கு அடுத்து உள்ளது.


ட்டுமானம் முழுமைக்கும் தேக்கு மரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. உயர்ந்த தூண்களும், அழகிய வளைவுகளும், மாடியின் இரு திசைகளிலுமுள்ள உப்பரிகைகளும் அரண்மனைக்கு கம்பீரம் சேர்க்கிறது. திப்பு சுல்தான் தனது தர்பாரை அரண்மனையின் கிழக்கு மற்றும் மேற்கு உப்பரிகைகளில் வீற்றிருந்து நடத்தியதாக நம்பப் படுகிறது. 

#5
இந்தோ-இஸ்லாமிக் கட்டிடக் கலையினைத் தழுவி அமைக்கப்பட்டள்ள இரு வண்ணத்திலான வளைவுகளும் தூண்களும்...

#6

முதல் தளத்தையும் அதன் உப்பரிகைகளையும் அடைய நான்கு பக்கங்களில் படிக்கட்டுகள் உள்ளன. முதல் தளத்தில் இருக்கும் நடுக்கூடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு சிறிய அறை பிரத்தியேகமாக பெண்களுக்காக (Zenana Quarters) அமைக்கப்பட்டுள்ளது. 

#7

தேக்கு மரத்தினால் ஆன இத்தூண்களின் அடிப்பாகம் கற்களால் ஆனது.

#8
ஃப்ளிக்கர் தளத்தின் எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் தேர்வாகி
6200++ பக்கப் பார்வைகைளைப் பெற்ற படம்.
அரண்மனையின் சிகப்பு வண்ண சுவர்களில் எடுப்பாகத் தெரியும் வகையில் அழகான பூ வடிவங்களிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கீழ் தளத்தில் இரண்டு அறைகள் தற்போது சிறு அருங்காட்சியமாக உள்ளது: 

#9

அருங்காட்சியத்திற்குள் படங்கள் எடுக்க அனுமதியில்லை.  திப்பு சுல்தானின் சாதனைகளையும்,  நிர்வாகத் திறமையையும் எடுத்து இயம்பும் ஆவணங்களையும் படங்களையும் கொண்டுள்ளது. பழைய ஓவியங்களோடு, அந்நாளைய மனிதர்கள் மற்றும் அக்காலக் கட்டத்தைக் கண் முன் கொண்டு வரும் புதிய ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. லண்டனில் இருக்கும் விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள ‘திப்புவின் புலி’ ஓவியத்தின் நகல் இங்குள்ளது. 

மிக முக்கியமான ஓவியம், திப்பு சுல்தான் தன் மனக்கண்களால் உருவாக்கிப் பின்னர் செய்ய வைத்த அரியணை. தங்கத் தகடுகள் கொண்டு பூசப்பட்டு, மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அரியணை. ஆங்கிலேயரை முழுவதுமாக வீழ்த்தும் வரை அதில் அமருவதில்லை என திப்பு சுல்தான் சூளுரைத்திருந்தார். அவர் காலமான பின், ஒரே நபரால் விலை கொடுத்து வாங்க முடியாதென ஆங்கேலயர்கள் இந்த அரியணையைப் பிரித்தெடுத்து ஏலத்திற்கு விட்டது.




# 10
அரண்மனையின் உள்ளே முதல் தளத்திலிருந்து வெளிப்புறம் நோக்கிய கோணங்களில்..., உப்பரிகையும் தூண்களும் வளைவுகளும்...!


#11

ர்நாடக அரசின் தோட்டத் துறை அரண்மனையின் முன் பகுதியை அழகான புல்வெளி மற்றம் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறது. 

#12


#13

#14

#15

அரண்மனை குறித்த தகவல்களைக் கொண்ட பலகைக்கு அடுத்து மற்றொரு எச்சரிக்கைப் பலகையும் காணக் கிடைத்தது. அது, இந்த நினைவுச் சின்னம் 1958_ல் நிறைவேற்றப்பட்ட பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் சட்டத்தின் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கூறுகிறது. பின் 2010_ல் மேம்படுத்தப்பட்ட இச்சட்டம், இந்த இடத்தை எந்த வகையிலும் சேதப் படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ அபராதமும் சிறைத் தண்டனையும் உண்டென எச்சரிக்கிறது.

#16

வாரயிறுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. உப்பரிகைகளில் நின்று போஸ் கொடுத்து படம் எடுத்துக் கொள்ள ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தகவல்கள்: வளாகத்திலிருந்து அறிவிப்புப் பலகை மற்றும் விக்கிப்பீடியாவிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளேன்.


***

11 கருத்துகள்:

  1. அருமை
    இரண்டு முறை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. மிக அழகான அரண்மனை.
    படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான விவரங்கள்.   மிக அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான விபரங்களும் மிக அழகிய புகைப்படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. மிக அழகிய படங்கள் ...செல்ல வேண்டும் என எண்ணி உள்ள இடம் ...

    இந்த முறை மைசூரில் உள்ள திப்பு வின் SUMMER PALACE சென்றோம் ..அங்கும் மிக அழகிய கட்டமைப்புகள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைசூரிலுள்ள திப்பு சுல்தான் சம்மர் பேலஸ் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். அப்போது வீடியோ கேமராவினால் வளாகத்தை படமாக்கியிருந்தேன்:).

      பெங்களூரிலுள்ள சம்மர் பேலஸுக்கு அவசியம் செல்லுங்கள். அருகிலேயே பெங்களூர் கோட்டையும் உள்ளது.

      நன்றி அனு.

      நீக்கு