சனி, 26 அக்டோபர், 2019

கல்கி தீபாவளி மலரில்..

2019 கல்கி தீபாவளி மலரில்..



முழுப்பக்க அளவில்..
நான் எடுத்த ஒளிப்படம்..

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆன்மீகம், நகைச்சுவை, நேர்காணல், சிறப்புச் சித்திரங்களுடன் 240 பக்கங்களுக்கு வெளியாகியுள்ள இம் மலரில் 9 ஒளிப்படக் கலைஞர்களின் பங்களிப்பும்..


தோட்டத்துடன் கூடிய இப்போதைய வீட்டுக்கு வந்ததில் இருந்து மூன்றரை வருடங்களாக இங்கு வரும் விதம் விதமானப் பறவைகளைப் படமாக்கிக் கொண்டே இருக்கிறேன். முத்துச்சரத்தில் ‘பறவை பார்ப்போம்..’ பகுப்பின் கீழ், வீட்டுத் தோட்டத்தில் மட்டுமே படமாக்கிய 20 வகைப் பறவைகளை அவற்றின் உயிரியல் தகவல்களுடன் பகிர்ந்திருக்கிறேன். அப்பதிவுகளை மின்னூல் ஆக்கும் எண்ணமும் உள்ளது. இந்நேரத்தில் தொடர்ந்து Bird Photography-யில் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளிக்கிறது கல்கி தீபாவளி மலர் வெளியீடு.

கல்கி தீபாவளி மலரில் ஒளிப்படம் வெளியாவது தொடர்ச்சியாக இது ஒன்பதாவது வருடம் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி.
2011 , 2012 , 2013 , 20142015, 2016, 20172018

நன்றி கல்கி!

நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
***

22 கருத்துகள்:

  1. படம் மிக அழகு. மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்.

    குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நான் வியப்படையும் கட்டுமானங்களில் இந்த குருவிக்கூடும் ஒன்று. குருவியுடன் மிக நேர்த்தியாக படம் பிடித்துள்ளீர்கள்.

    தங்களுக்கும், வெளியிட்ட கல்கி இதழுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஆச்சரியமூட்டும் கட்டுமானம்.

      வாழ்த்துகளுக்கு நன்றி அமைதி அப்பா.

      நீக்கு
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  சும்மாவே தேடிச்சென்று புகைப்படங்கள் எடுக்கும் நீங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிடைப்பவற்றை மிஸ் செய்வீர்களா என்ன!

    இனிய தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
    கல்கியில் பறவை கூடு இடம் பெற்றதற்கு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

    கல்கி வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
  7. பத்திரிக்கையில் படம்வெளியானது மகிழ்ச்சி தருகிறது

    பதிலளிநீக்கு
  8. படம் ரொம்பவே அழகு. கல்கியில் வெளியீடு. மகிழ்ச்சி. பாராட்டுகளும்...

    பதிலளிநீக்கு