ஞாயிறு, 3 மார்ச், 2019

மகா சிவராத்திரி வாழ்த்துகள்!

சிவ பெருமானை வழிபடச் செல்லுகையில் நம்மை முதலில் வரவேற்பவர் நந்தி தேவரே. சிவனின் அருளைப் பெற நந்தியையே முதலில் வணங்குகிறார்கள். பிரதோஷக் காலங்களில் நந்திக்குதான் முதலில் விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடக்கும். நந்தியின் காதுகளில் தமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

#1
‘பெருமைமிகு வாழ்வருளும் நந்தியம் பெருமான்'
காடு மல்லேஸ்வரர் ஆலயம்,
பெங்களூரு
மீபத்துப் பயணத்தின் போது மொபைலில் (OnePlus6T) க்ளிக் செய்த சில படங்கள்:

#2
‘மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ.
மறைநான்கின் அடிமுடியும் நீ. மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ.'


(சென்னை விமான நிலையத்தில்...)

தி
ருப்பூரில் சென்ற மாதம் எடுத்த படங்கள். வாகனத்தில் பவனி வந்த ஆதியோகி. ஒவ்வொரு வீதியாக, மகாசிவராத்திரிக்கான அழைப்பாக ஈஷா அமைப்பினர் செய்திருந்த ஏற்பாடு.

அருள் வடிவாகிய ஆதி சிவன்
#3

#4


கா சிவராத்திரியை ஒட்டி சிவாலயங்கள் குறித்த எனது முந்தைய பதிவுகளில் தொகுப்பு:

1. இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள் 
http://tamilamudam.blogspot.in/2010/12/blog-post_09.html

2. விஸ்வரூப தரிசனம்-பெங்களூரு சிவாலயம் (பாகம் 1)
https://tamilamudam.blogspot.com/2011/09/1.html

3. ஒரு வலம்.. பல ஸ்தலம்.. - பெங்களூர் சிவாலயம் (பாகம் 2) 
https://tamilamudam.blogspot.com/2011/09/2.html

4. மகா சிவராத்திரி - சிறப்புப் படங்கள் இரண்டு
https://tamilamudam.blogspot.com/2012/02/blog-post_19.html

5. அதிசய ஆலயம் - நந்தி தீர்த்த க்ஷேத்ரம் - பெங்களூர் மல்லேஸ்வரம்
https://tamilamudam.blogspot.com/2016/01/blog-post_8.html

6. பெங்களூரு காடு மல்லேஸ்வரர் ஆலயமும்.. நாக தேவர்களும்..
https://tamilamudam.blogspot.com/2016/02/blog-post_23.html

அகிலம் செழிக்க அமைதி நிலவ 
ஈசனின் அருள் அனைவருக்கும் கிடைத்திட
மகா சிவராத்திரி வாழ்த்துகள்!
***

12 கருத்துகள்:

  1. மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  2. மொபைலில் க்ளிக் செய்த படங்களை தனியாக அடையாளம் காணலாம். இவை சற்றே பெரிதாக்கப் பட்டிருக்கின்றனவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே. இங்கே பதியும் போது மற்ற படங்களைப் போலவே பெரிய அளவில் பதிந்துள்ளேன். அவ்வளவுதான்.

      நீக்கு
  3. சிறப்பான தரிசனம் ...அழகு

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அழகு....

    சிவராத்திரி தினத்தில் எப்போதும் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என்ற பிரார்த்தனைகளுடன் நானும்....

    பதிலளிநீக்கு