ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

மாயஜாலம்

#1
"புன்னகையை அணிந்திடு. 
நண்பர்களைப் பெற்றிடு" 
_ George Eliot

#2
"குழந்தைப் பருவம் என்பது 
களங்கமற்றதும் 
விளையாட்டுத்தனம் நிறைந்ததும் ஆகும். 
சுதந்திரமும் மகிழ்ச்சியும் கொண்டதாகும்"


#3
“குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுவோம்!”

a) ‘நான் ரொம்ப ரொம்ப சமர்த்து..’
b) ‘அப்படின்னு நினைச்சிட வேண்டாம்..’
c) ‘அடுத்து என்ன சேட்டை செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்.

#4
“குழந்தைகளுக்குத் தேவை முன்மாதிரிகளே தவிர விமர்சகர்கள் அல்ல.”
-Joseph Joubert 

#5
“வாழ்க்கை ஒரு சறுக்கு மரம் போன்றது.. உல்லாசமானது, 
ஒவ்வொரு நாளும் சேமிக்கப்பட்டு வர, 
மீண்டும் மீண்டும் செய்ததையே செய்து மகிழ்கிறோம்” 
- Linda Poindexter


#6
"உலகை ஒரு குழந்தையின் கண்கள் வாயிலாக 
நாம் அனைவரும் காண்போமேயானால், 
காணும் ஒவ்வொன்றிலும் நிகழும்.., 
மாயஜாலம்!"

**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்:)!
***

18 கருத்துகள்:

  1. குழந்தைகள் எல்லாம் அழகு.
    குழந்தையின் கண்கள் வாயிலாக உலகை கண்டால் இந்த பூமியில் நிச்சயம் மாயஜாலம் தான்.
    அப்படி நடக்குமா? நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறது உள்ளம்.
    இந்த குழந்தைகளை காப்பதே இப்போது கடவுள் அருள் வேண்டுமே ராமலக்ஷ்மி.
    மழலை பூக்கள் மனதை மகிழ்வித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கடவுளின் கருணை தேவையாய் இருக்கிறது.
      கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. சிந்தனைகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். சிறப்பான சிந்தனைகள்.

    தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகள் படங்கள் அழகு. வரிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அழகு
    வண்ணத்தைவிட கருப்பு வெள்ளைப் படங்கள் அழகோ அழக

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகளோடு இருக்கும் போது குழந்தைகளாக மாறி விட வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. அனைத்துப் படங்களும் சிறப்பு. இருப்பினும் கடைசி படத்தில் உள்ள குழந்தையின் பார்வையில் கம்பீரம், தன்னம்பிக்கை, லேசான அலட்சியம் கலந்த அழகிய மாயாஜாலம். சொல்லி வைத்தாற்போல பெரும்பாலான தொகுப்பில் கடைசி படமும் வரிகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலிரண்டு படங்கள் தவிர்த்து மற்றவற்றில் இருப்பது என் தம்பி மகள்:).

      தொகுப்பில் முதலும் கடைசியும் இருப்பதில் சிறப்பானதாக அமைய சில நேரங்களில் கவனம் எடுத்துக் கொள்வதுண்டு. தலைப்புக்கான பொன்மொழிப் படம் கடைசியாக வருகிற மாதிரி சில நேரங்களில் பார்த்துக் கொள்வேன். நல்ல அவதானிப்பு:). நன்றி.

      நீக்கு
    2. தம்பி மகள் என அறிந்தது மகிழ்ச்சி. அழகு! அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.

      நீக்கு
  8. சிரிக்கும் படங்கள்...அழகோவியம்

    பதிலளிநீக்கு