ஞாயிறு, 22 ஜூலை, 2018

வெற்றியின் அளவுகோல்

#1
‘வெற்றி என்பது முடிவல்ல.
 தோல்வி என்பது அழிவுமல்ல.
 துணிவுடன் தொடர்வதே முக்கியம்.’
 _ Winston Churchill


#2
‘எந்தவொரு கருணை கொண்ட செயலும், அது எத்தனை சிறிதாயினும்,  வீணாவதில்லை, எப்போதும்.’ 
_ ஈசாப்

 #3
“வானமே எல்லையின் தொடக்கம் என்பதை எப்போதும் நம்புகிறேன்” 
_MC Hammer

#4.
‘உறுதியாய் இருங்கள்.
 போனது போகட்டுமென முன்னேறிச் செல்லுங்கள்!’


#5
‘வெற்றியின் அளவுகோல் மகிழ்ச்சியும் மன அமைதியும்.’
 - Bobby Davro

#6
‘எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென நீங்கள் தீர்மானிக்கிறீர்களோ
அவ்வளவு மகிழ்ச்சியாய்  இருப்பீர்கள்!’

***
ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்த பூக்களின் படங்கள் ஆறு..
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..!
தொகுப்பது தொடரும்..!

14 கருத்துகள்:

  1. அழகான படங்கள். தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்த வாசகங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அழகு. வரிகளும் அழகு.

    பதிலளிநீக்கு
  3. வெற்றி, தோல்வி என்பது திருப்தி மற்றும் திருப்தி இன்மையால் அளவிடப்படுகிறது எனப் படித்ததாக நினைவு.
    நல்ல தொகுப்பு. அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அந்தத் திருப்தியில் கிடைப்பதே மகிழ்ச்சியும், மன அமைதியும்.

      மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகங்கள் அருமை படங்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பகிரப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கப்படங்கள் போல இருப்பது சாத்தியமில்லை என்றாலும் 2,3,5 ஆகியன ஓரளவுக்குப் பொருந்திப் போவதாகவே எண்ணுகிறேன். எப்படிக் கவிதைகளுக்கு விளக்கம் கூறினால் அவற்றின் அழகு போய்விடுமோ அதே போலவே இவற்றுக்கும் விளக்கம் சொன்னாலும். பரவாயில்லை. தொடர்ப்பு படுத்திக் கொள்ள முடியவில்லையெனில் தனித்தனியே இரசித்திடலாம். நன்றி.

      நீக்கு
  5. பூக்களின் படங்களும் அதற்கு கொடுக்கப்பட்ட வாசங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு படமும் மிக அழகு..

    இப்படி எடுக்க வேண்டும் என ஆவல் அதிகம் வருகிறது...

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்கள் எடுப்பதிலும் பதிவதிலும் முறைப்படுத்துவதிலும் என பலவகையிலும் உங்கள் பதிவுகள் எனக்குப் பாடமாக உள்ளன. புகைப்பட வழிகாட்டியென உங்களையே ஏற்றிருக்கிறேன். அன்பு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு