ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

உயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா?


‘மறுபக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் உண்டு’

#2
“எல்லோரையும் போலவே நீங்கள் சிந்திப்பீர்கள் ஆயின், 
நீங்கள் சிந்திக்கவே இல்லை என்று பொருள்”

#3
“நமக்குள் இருக்கும் திறமைகளைக் கண்டறியத் தேவையானது 
விடாத முயற்சியே அன்றி அறிவோ ஆற்றலோ அன்று.”
_ Winston Churchill


#4
“ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது வலிமையைக் கொடுக்கிறதெனில், 
ஒருவரை ஆழமாக நேசிப்பது தைரியத்தைக் கொடுக்கும்.” 
_ Lao Tzu

#5
“உயிர் வாழ்வதே டால்ஃபின்களுக்கும் தேனீக்களும் மகிழ்ச்சி அளிப்பது.
மனிதனுக்கு மகிழ்ச்சி அதை அறிந்து போற்றுவது.”
- Jacques Yves Cousteau 

#6
 “எல்லாவற்றையும் நிழல்களாய் உணர்கின்ற வேளையில் 
கதிரவனை நோக்கி உங்கள் முகத்தைத் திருப்புங்கள்” 
_Helen Keller

#7
"கேட்கிறீர்கள், ஆனால் கவனிக்கிறீர்களா?
உயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா?
பார்க்கிறீர்கள், ஆனால் உள்வாங்குகிறீர்களா?"

#8
"நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ 
அது உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது"
_Rumi

***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் .. தொகுப்பது தொடருகிறது..

14 கருத்துகள்:

  1. அனைத்தையும் ரசித்தேன். முதல் படம் போல நான் ஒன்று எடுத்து வைத்திருக்கிறேன். அதற்கு வரிகளும் யோசித்து வைத்திருக்கிறேன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை நீங்கள் FB_யில் பகிர்ந்து பார்த்த நினைவிருக்கிறது. வரிகளுக்குக் காத்திருக்கிறேன்:).

      நீக்கு
  2. அழகான படங்கள். படங்களுக்கான தங்களது வரிகளும் அற்புதம். தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல ரசனையான புகைப்படங்கள், ஏற்ற வரிகள்.

    பதிலளிநீக்கு
  4. நானும் நிறையவே படங்களை எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் தகுந்த வரிகளோடு வெளியிடத் தெரியவில்லை மேலும் என்படங்கள் பலதும் எனக்கு வேண்டியவற்றைச் சுற்றியே இருக்கும் என்ன இருந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை உங்கள் அனுபவக் குறிப்புகளோடு அருமையாகவே பதிந்து வருகிறீர்கள்.

      நன்றி GMB sir.

      நீக்கு
  5. அருமை. படங்களும் வரிகளும் அருமை

    பதிலளிநீக்கு