ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மீட்க முடியாத மூன்று

#1
“எவ்வளவோ இருக்கிறது வாழ்க்கையில்,
அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும்..”
_ காந்திஜி

#2
“வானில் இல்லை, நம் மனதில் இருக்கிறது வழி!”
_புத்தர்

#3
"ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு."
_Protagoras
#4
“எட்ட முடியாததென எதுவுமில்லை”

#5
"நல்ல தலைவர்கள் ஒரு சமயத்தில்
 நல்ல பின்பற்றுவோராக இருந்தவர்கள்."
#6
“தீயவற்றைப் பார்க்காதே..
தீயவற்றைப் பேசாதே..
தீயவற்றைக் கேட்காதே”
புத்திசாலிக் குரங்குகள்

#7
வாழ்க்கையில் மீட்க முடியாத மூன்று விஷயங்கள்:
வார்த்தை, சிந்திய பிறகு..,
வாய்ப்பு, நழுவ விட்ட பிறகு..
நேரம், வீணாக்கிய பிறகு..

#8
  “தங்கையைப் போல் சிறந்த தோழி எவருமில்லை”

#9
“நம் மீது வைக்கப்படும் நம்பிக்கை, 
நம் மீது காட்டப்படும் அன்பை விடவும் 
உயரிய வெகுமதியாகும்”
_George MacDonald

***
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]

18 கருத்துகள்:

  1. எல்லா படங்களும், சொல்லிய கருத்தும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. தம்பி மகள், மகனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன் அனைத்தையும். நேரமும், கணமும் ஒரே பொருள் தருமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      நானும் கவனித்தேன். கணம் என்பது நழுவ விட்ட சந்தர்ப்பம் அல்லது வாய்ப்பு எனும் பொருளில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். மாற்றிடலாமோ:)?

      நீக்கு
  4. வானில் இல்லை..

    நம் மனத்தில் இருக்கிறது ..வழி


    உண்மை...

    அழகிய படங்களுடன் ...சிறப்பான தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அழகு. சேர்த்திருக்கும் பொன்மொழிகளும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நாம் எத்தனை பேரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கிறோம்? எனும் கேள்வி இயல்பாக எழுகின்றது.
    நல்ல சிந்தனைத் தொகுப்பு.
    மிளிரும் கண்கள். சாந்தமான முகம். குழந்தைகள் எப்போதும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
  7. மிகப் பொருத்தமான வரிகளுடன் அழகிய படங்கள் . நன்றி ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. படங்களின் குறிப்புகள் அருமையா இருந்தது

    பதிலளிநீக்கு