ஞாயிறு, 26 நவம்பர், 2017

என் வழி.. தனி வழி..!

#1
“ஏற்கனவே தம்மிடம்  இருப்பவற்றைப் போற்றிடத் தெரியாதவருக்கு என்றைக்குமே கிடைக்காது மகிழ்ச்சி.”
-புத்தர்

#2
“எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். ஆனால்,
ஒருபோதும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள்” 

#3
"ஓரிடத்தில் நிற்பதும் 
சில நேரங்களில் முன்னேறிச் செல்வதற்கு ஒப்பாகும்"

#4
"பொறுமை காத்திடுங்கள். 
சரியான நேரத்தில் எல்லாம் வந்து சேரும்."
_புத்தர்


#5
“உங்கள் மதிப்பை உணராதவர்களால் சூழப்பட்டிருப்பதை விட
தனியாக நிற்பது மேலானது.”

#6
“சின்ன அடிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். 
சின்ன அடிகளே நாளை நீங்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அருகே உங்களை இட்டுச் செல்பவை.”  


#7
“ஒவ்வொரு அடிக்கும் முக்கியத்துவம் இருக்கிறது”

#8
"மாற்றங்களோடு பொருந்திப் போகும் திறனே 
புத்திசாலித்தனம் " 
_ Stephen Hawking

#9
"மாணவர் தயாராகும் போது
ஆசிரியர் தோன்றிடுவார்."
_புத்தர்

#10
“யாரையும் நான் முன் நடத்திச் செல்வதுமில்லை, பின்பற்றுவதுமில்லை. 
என் பாதையை நானே வகுத்துக் கொள்கிறேன்.”
***

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]

16 கருத்துகள்:

  1. படங்களை அதிகம் ரசிக்கவா? வரிகளை அதிகம் ரசிக்கவா? பூனையார் மீண்டும் மீண்டும் சான்ஸ் பெற்றுள்ளார்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே அருமை. நம்பிக்கை, எதிர்பார்ப்பு வேறுபாடு மிகவும் நுட்பம்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அழகு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மன அமைதி, மன நிறைவு, முன்னேற்றம் இவற்றை அடைய உதவும் கருத்தான வாசகங்களுக்குப் பொருத்தமான அழகிய படங்கள். உங்கள் வழி நல்லதுதான் :).

    பதிலளிநீக்கு