ஞாயிறு, 26 நவம்பர், 2017

என் வழி.. தனி வழி..!

#1
“ஏற்கனவே தம்மிடம்  இருப்பவற்றைப் போற்றிடத் தெரியாதவருக்கு என்றைக்குமே கிடைக்காது மகிழ்ச்சி.”
-புத்தர்

#2
“எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். ஆனால்,
ஒருபோதும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள்” 

#3
"ஓரிடத்தில் நிற்பதும் 
சில நேரங்களில் முன்னேறிச் செல்வதற்கு ஒப்பாகும்"

#4
"பொறுமை காத்திடுங்கள். 
சரியான நேரத்தில் எல்லாம் வந்து சேரும்."
_புத்தர்

வியாழன், 16 நவம்பர், 2017

அவளும் நோக்கினாள் - சிறுகதை

வலை உலகில் தங்கள் பாணி புதிய பாணி என ஒரு பல்சுவை இதழாகச் செயல்பட்டு வருகிறது “எங்கள் ப்ளாக்”.  அதன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ஸ்ரீராம், மறைந்த அவரது தந்தை எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசைப்படி, ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என நிறைவடையுமாறு கதை எழுத நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தை உறவினர் வட்டத்தில் முயன்றிடச் சொன்னதை அனைவருக்குமான அன்பு வேண்டுகோளாக முன் வைக்க... அந்த வரிசையில் 27_வது கதையாக எனது பார்வையில் சீதை ராமனை மன்னிக்கும் கதை..


அவளும் நோக்கினாள்
சிலுசிலு என்று வீசிய வேப்பமரக் காற்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதலாய் இருக்க, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலி அப்படியே அதில் லயித்துக் கண் அசந்து விட்டாள்.

‘பாம்.. பாம்’

‘ஆஆ.. அவர் கார்..  ஆ.. வந்துட்டார்..’

‘பேரன் பேத்தி எடுத்த பிறகும் இப்படி வாசப்படியில ஒக்காந்து... வேடிக்கைப் பார்க்கிறேங்கற பேர்ல... வெட்கமாயில்ல...’ ஈட்டிப் பார்வையில் ஒலிக்காமல் ஒலித்த வார்த்தைகள் உள்ளத்தைத் துளைக்க விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள் மைதிலி.

புதன், 8 நவம்பர், 2017

கடவுளின் தாய்மொழி

#1
“அனுமானங்களில் நனைந்து நிற்பதை நாம் அறியாத வரையில் நம்மை நாம் அறிந்து கொள்ளவே முடியாது.” _Adrienne Rich

#2
"எந்தவொரு பிரச்சனையிலும் நீண்ட காலம் நின்று விட வேண்டாம், வாழ்க்கைப் படகு எப்போதுமே மிதமாகப் பயணிப்பதில்லை ஆதலால் மூழ்கிட நேரலாம்."

#3
“நம்மைப் பிரிப்பது நமக்கிடையேயான வித்தியாசங்கள் அல்ல. அவற்றை அங்கீகரிக்கவோ, ஒப்புக் கொள்ளவோ, கொண்டாடவோ முடியாத நம் இயலாமையே.”
_Audre Lorde