புதன், 29 ஜூன், 2016

கண்கள் பேசுமா.. - கேமரா தினம்

னிதர்களை.. குறிப்பாக Candid படங்கள் எடுக்கும் போது, கண்களின் தொடர்ப்பு கிடைத்து விட்டால் கேமராவுக்கு உற்சாகம். அவர்களுக்குத் தெரியாமல்.. அல்லது தெரிந்தாலும் கேமராவைப் பார்க்க விருப்பமின்றி தங்கள் வேலையைத் தொடருகையில்.. எடுக்கிற படங்கள் இயல்பாக அமையும்தான். ஆனால் நேருக்கு நேரோ அல்லது ஓரக் கண்ணாலோ கேமராவைப் பார்த்து விட்டால் படங்களுக்கு உயிரோட்டம்  கூடுவதை மறுக்க முடியாது. போனால் போகட்டுமெனப் பார்வையோடு நமக்கொரு புன்னகையையும் பரிசளித்து விட்டால்..? அடடா.. கேட்கவே வேண்டாம். உண்மையா இல்லையா என நீங்களே சொல்லுங்கள்....


#1
பொக்கை வாய்ப் புன்னகையும் 
கண்களில் கடலெனப் பொங்கும் கனிவுமாய்..

#2
மனதின் உறுதி கண்களில் ஒளியாய்..


#3
முருகனடியார்


#4
கண்ணாலே தருகிறார் அனுமதி..

#5
 சிரிக்கும் கண்கள்..
***

16 கருத்துகள்:

  1. ஆகா
    ஒவ்வொரு கண்ணும் ஓராயிரம் கதைகளைச் சொல்லுகிறதே
    அருமை

    பதிலளிநீக்கு
  2. கண்கள் பேசுவது அருமை.
    உங்கள் காமிராவும் பேசுமே !
    காமிரா தினத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான புகைப்படங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. காமிராவுக்கு என்றால் இயல்பிலேயே புன் முறுவல் பூக்கும் முகம் நம்மில் பலருக்கு. கண்கள் கதை பேசுகின்றன/ ஏன் பதிவே எழுதி விடலாமே

    பதிலளிநீக்கு