வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பட்ட கடன் - சர்வதேச பூமி தினம் 2016

#1
மரங்களை நடுபவன் தனக்கு நிகராக மற்றவர்களை நேசிப்பவனாக இருக்கிறான்.
_Thomas Fuller

#2
நம் அனைவரையும் சந்திக்க வைப்பதும், பரஸ்பர நலனுக்காக அக்கறை காட்ட வைப்பதும், ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளச் செய்வதும் சுற்றுச் சூழல் மட்டுமே.
—Lady Bird Johnson

#3
அத்தனை ஜீவராசிகளுக்கும் நண்பனாக இருப்பவனே நல்ல மனிதன்.
-காந்திஜி


#4
நம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருப்பது பூமி ஒன்றே.
_ Wendell Berry

#5
இயற்கையுடன் நடக்கும்போது தான் தேடியதை விடவும் அதிகமாகவே கிடைக்கப் பெறுகிறான் மனிதன்.
—John Muir

#6
எந்த ஒரு மனிதன், இந்தப் பூமி தன் முப்பாட்டன் சொத்தென்று எண்ணாமல் வருங்கால சந்ததியரிடம் பட்ட கடன் என உணருகிறானோ அவனே உண்மையான சுற்றுச் சூழல் ஆர்வலன்.
_ John James Audubon
புவி காப்போம்!
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!
‘சூழல் மாசடைதல்’ - ‘பெங்களூரு’ ஐடி நகரத்தின் இன்னொரு பக்கம்
முப்பாட்டன் சொத்தா பூமி? - ஹல்சூரு ஏரி, பெங்களூரு
சுற்றுச்சூழல் காப்போம்! - கைக்கொண்டனஹள்ளி ஏரி, பெங்களூரு (பாகம் 1)
வாழுங்கள்.. வாழ விடுங்கள்.. - பெங்களூர், கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 2)
ஆயிரம் தட்டான்களும் அயல்நாட்டு ஆவணப்படமான வெற்றிக் கதையும் - கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 3)

14 கருத்துகள்:

  1. அத்தனையும் அருமையான எண்ணங்கள்

    உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  2. மிக அற்புதமான புகைப்படங்கள் . அவற்றுக்கு ஜரிகை இட்டாற்போல் உங்கள் எண்ணத் துளிகள்.ரசித்தேன் மேடம்

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். பூமியை காப்போம்.

    பதிலளிநீக்கு
  4. அருமை.
    பூமி மட்டுமே நம் எல்லோருக்கும் பொதுவானதா? என்னமோ சொல்லிட்டுப் போனாரு விடுங்க. படம் அழகா இருக்கா இல்லையா அதான் முக்கியம். :-).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, நன்றி. பல நாட்களாக உங்கள் தடாலடிக் கருத்துகள் இல்லாமல் பதிவுலகம் சுவாரசியமாகவே இல்லை:)!

      நீக்கு
  5. அத்தனை ஜீவ ராசிகளுக்கும் நண்பனாக இருப்பது சாத்தியமா? காந்திக்கென்ன சொல்லிட்டாரு. கரப்பான் பூச்சியைப் பாத்தா என்ன செஞ்சிருப்பாருனு நமக்கு எப்படி தெரியும், என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அது சரி. கொசுவை விட்டு விட்டீர்களே:). அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன? காடுகளை அழித்து விலங்குகளுக்குப் போக்கிடமில்லாமல் செய்வது, மரங்களைச் சரித்து பறவைகளின் வீடுகளைப் பறிப்பது போன்றன குறித்து சிந்திக்கலாமே. பெங்களூர் சர்ஜாப்பூர் பக்கத்தில் முன்னர் யானைகள்தாம் கூட்டமாக நகரத்துக்குள் வந்தன. சமீபத்தில் ஒரு பிரபல பள்ளிக்குள் சிறுத்தை வந்து நின்றது பெரிய செய்தியானது. யார் இடத்தில் யார் இருக்கிறோமோ, தெரியலை போங்க!

      நீக்கு
    2. கொசு அதி பயங்கர ஜீவ ராசியாச்சே?
      சிறுத்தை பற்றி நானும் படித்த நினைவு. கொடுமை.

      நீக்கு
  6. ஆன்றோரின் சிறந்த கருத்துக்களுக்கேற்ற அருமையான புகைப்படங்கள்!!

    பதிலளிநீக்கு