வியாழன், 31 மார்ச், 2016

தூறல்: 25 - முத்துச்சரம் செயலி; நவீன விருட்சம்; வளரி; வல்லமை

நீண்ட இடைவெளிக்குப் பின்.. 25_வது தூறல்:
முத்துச்சரம் வலைப்பூவை ஆன்ட்ராய்டில் எளிதாகத் திறந்து வாசித்திட என் தங்கை உருவாக்கியிருக்கும் செயலி(app):
Muthucharam
தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். 

கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘muthucharam' எனத் தேடினாலும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வசதிக்காக எனக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. செயல்பாட்டின் சோதனைக்குப் பிறகு சில வாரங்களுக்கு முன்னர்தான் சைட் பாரில் அறிவிப்பாக சேர்த்திருக்கிறேன். எத்தனை பேர் கண்ணில் பட்டதெனத் தெரியாது:). விருப்பமானவர்கள் நிறுவிக் கொள்ளலாம். இதுவரையில் 10-50 வரையிலான எண்ணிக்கையில் உள்ளது. அங்கே உங்கள் (review) கருத்துகளையும் பதியலாம்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

மாம்பழம் சாப்பிடலாம் வாங்க..

பெங்களூரில் சென்ற வாரத்தில் தொடர்ந்து இரண்டு தினங்கள் இரவில் மட்டும் மழை. “அடிக்கிற வெயிலுக்குக் காலையிலும் கொஞ்சம் பெய்தால் நல்லாருக்குமே” என்ற போது “இது மாங்கா மழை. இப்படித்தான்.. லேசாப் பெய்ஞ்சு விட்டிரும்” என்றார் வீட்டுப் பணிகளில் எனக்கு உதவ வரும் பெண்மணி.

“மாங்கா மழையா.. அப்படின்னா..” ஆச்சரியமாய்க் கேட்டேன்.

“மாம்பழ சீஸன் நெருங்குதில்லையா? மரத்திலிருக்கும் மாங்காய்களப் பழுக்க வைக்கவும், சீஸன் வர்றத நமக்கு ஞாவப்படுத்தவும் வர்ற மழைக்குப் பேருதான் மாங்கா மழை” என்று சிரித்தார்.

அட.. ஆமாம். மாம்பழ சீஸன் வந்துட்டே இருக்கே. போன கோடை விடுமுறைக்கு தம்பி பெங்களூர் வந்திருந்தபோது எனக்கும் தங்கைக்கும் கொண்டு வந்த மாஞ்சோலை தோட்டத்து(விவரம் இறுதியில்) செந்தூர மாம்பழங்களும், அப்போது எடுத்த படங்களும் கூடவே நினைவுக்கு வர இதோ இந்தப் பகிர்வு.

பழங்களின் ராஜா மாம்பழம். அதை எப்படி ரசித்து ருசித்துச் சாப்பிடணும்னு காட்டுகிறார் எங்க வீட்டு இளவரசர். கூடவே அதன் நற்பலன்கள் என்னென்ன என்பதையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க....

[அனைத்துப் படங்களும் 35mm லென்ஸில் எடுக்கப்பட்டவை.
தகவல்கள்: இணையத்திலிருந்து..]

வியாழன், 24 மார்ச், 2016

குரூப்புல டூப்பு

#1

#2

குரூப்புல டூப்பு யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்கதானே? எதற்காக இப்போ டூப்பை ஓரம் கட்டணும்னு கேள்வி வரலாம்.

செவ்வாய், 22 மார்ச், 2016

கல்கி தீபம் இதழில்.. நந்தி தீர்த்த தலம்!


நந்தி தீர்த்த ஆலயம் குறித்த எனது கட்டுரை, படங்களுடன், அட்டையில் அறிவிப்புடன், 5 ஏப்ரல் 2016 இதழில் வெளியாகியிருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆலய தரிசனம்
#பக்கம் 34

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஞானத்தின் ஆரம்பம் - சாக்ரடீஸ் பொன் மொழிகள் 10

#1
அறிவாளிகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சராசரியானவர்கள் ஊர் உலக நடப்புகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்கள் அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

#2
மெய்யறிவு எதுவெனில், உனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதே.

#3
மாற்றத்திற்கான இரகசியம், உங்கள் சக்தி அனைத்தையும் குவித்துப் பழையவற்றோடு போராடிக் கொண்டிருப்பதில் இல்லை, புதியவற்றைக் கட்டமைப்பதில் இருக்கிறது.

வியாழன், 17 மார்ச், 2016

சில்வண்டுகளின் ஆரவாரம் - ‘மட்சுவோ பாஷோ’ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஆறு)

1.
இறக்கின்ற சில்வண்டு
என்னமாய்ப் பாடுகிறது
அதன் வாழ்க்கையை?

2.
மின்மினிப்பூச்சிகள் பார்த்திருக்கின்றன
மூழ்குகிறது படகு
போதையில் படகோட்டிகள்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

அன்பெனப்படுவது

#1
'பருவங்களின் உதவியை நாடியிராது வளருகின்ற மலருகின்ற ஒரே பூ, அன்பு.’ _ Kahlil Gibran

#2
முயன்றிட வேண்டும் என்கிற முடிவில் ஆரம்பமாகிறது ஒவ்வொரு சாதனையும். _ Gail Devers


#3
எவ்வளவு மெதுவாகச் செல்கிறாய் என்பது ஒரு பொருட்டேயில்லை நின்று விடாத வரையில். - Confucius


#4

வெள்ளி, 4 மார்ச், 2016

வாழும் தெய்வம்.. நதி அன்னை.. கங்கா தேவி - ஆலய தரிசனம்

தேவி கங்கம்மா என அழைக்கப்படும் கங்கை அம்மன் திருக்கோவில், பெங்களூர் மல்லேஸ்வரம் கோவில் தெருவில் இருக்கும் மற்றுமொரு ஆலயம்.
#1


இந்து புராணத்தில் கூறப்பட்டிருக்கும் தெய்வங்களில் மக்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே தெய்வம், நதி அன்னை, கங்கா தேவிதான் என்கிறார்கள்.
#2


தொன்மை, தூய்மை, பக்தி இவற்றின் அடையாளமாக அருள்பாலித்திருக்கும் தேவி கங்கம்மாவைத் தரிசிக்கவென பெங்களூரின் பலபகுதிகளிலிருந்தும் மக்கள் தேடி வருகிறார்கள்.
#3

கங்காதேவியை வழிபடுவதால் கிடைக்கும் நலன்கள், தேவியின் வெவ்வேறு பெயர்கள், புராணத் தகவல்கள் எனக் கோவில் கையேட்டிலிருந்த விவரங்களைப் பகிருகிறேன் சிறு குறிப்புகளாகப் படங்களுடன்...

பாவ நிவர்த்தினி