புதன், 13 ஜனவரி, 2016

செல்ஃபி சூழ் உலகு - குறும்படம்


ன்னை முன் நிறுத்த வழி தேடிக் கொண்டேயிருக்கிறது மனது. அப்படிச் செய்யாது போனால் காணாது போய்விடுவோமோ எனப் பதறுகிறது. நாளின் நகர்வை, பெருமை பேசும் மணித்துளிகளை, பரவச நொடிகளை சோஷியல் மீடியாக்களில் பகிர்வது ஒருவகை உற்சாகத்தை அளிப்பதாக நம்புகிறது. சுய விளம்பரங்களில் தவறில்லை என்கிறது. நல்லது செய்வதை நான்கு பேர் அறியச் செய்வது மேலும் பலரைச் சிந்திக்க வைக்குமல்லவா என்று சமாதானம் சொல்கிறது. அது உண்மையாவும் இருக்கலாம். ஆனால் இவற்றைத் தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கிறது என்பதை அருமையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் உழவன் (நவநீத்) இந்தக் குறும்படத்தில்.
#



கேமரா, பின்னணி இசை, காட்சிகளைத் தொகுத்த விதம் (எடிட்டிங்) அனைத்தும் அருமை. செருப்புகள் இல்லாததை ஒரு பொருட்டாக எண்ணாமல் வெற்றுப் பாதங்களுடன் துள்ளிச் செல்லும் சிறுமியும், அவள் மனதில் இடம் பிடித்து அழகியதொரு பரிசைப் பெறும் சிறுமியும் மனதில் நிற்கிறார்கள். உதவும் குணம், இருக்கிறவருக்கு மட்டுமேயானது அல்ல, இல்லாதவர் மனதிலும் இருக்கிறது இருமடங்கு ஈரம். தனக்கே இல்லாத நிலையிலும் தானம். சிந்தித்து அமைக்கப்பட்ட திரைக்கதை.

எதிர்பார்ப்புகள் இல்லாமல் நல்லன செய்தலை வாழ்வின் ஒரு இயல்பாக கொண்டு வாழ்பவருக்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் இக்குறும்படத்தை உருவாக்கிய M Pictures குழுவினருக்குப் பாராட்டுகள். செல்ஃபி சூழ் உலகு, 2015 கோயம்புத்தூர் குறும்பட விழாவில் முதல் பத்தில் தேர்வாகி விருது பெற்ற படம் என்பது கூடுதல் தகவல்.


***


12 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. தயாரிப்புக் குழுவுக்குப்பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் படம்ப்பா. பகிர்வுக்கு நன்றீஸ். நல்ல மனங்கள் இன்னும் இருக்கத்தான் செய்யுது!

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
  5. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு