வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஆல்பம் 2015 - புத்தாண்டு வாழ்த்துகள்!

திவுலகில் ஏழாம் ஆண்டையும் எழுநூறு++ பதிவுகளையும் கடந்த இவ்வருடத்தில் என்ன செய்தேன் என எப்போதும் போல ஒரு பார்வை. பல மாதங்களில் பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. சொந்த வேலைகள் மற்றும் பல காரணங்களால் எழுத்திலும் தேக்கம் என்றாலும் ஓரளவுக்கு முடிந்ததைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது, வேகமாகப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததில்..!

விதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பத்திரிகைகளிலும், சொல்வனம், நவீன விருட்சம், வளரி உள்ளிட்ட இதழ்களிலும், முத்துச்சரத்திலுமாகத் தொடருகின்றன.  கட்டுரைகள், நூல் விமர்சனங்களும்
பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

#

எடுத்த ஒளிப்படங்களுடன் வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்புகளும் பல பதிவுகளாக..! சிறுகதைகள் ஒன்று கூட எழுதாதது வருத்தமே. ஆயினும் என் சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புக்கு நண்பர்கள் பலரும் விமர்சனங்கள் அளித்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. படைப்புகளை வெளியிட்ட பத்திரிகை, இணையதள ஆசிரியர்களுக்கும் நன்றி.


ளரி இதழில், முன்னர் நான் அதீதத்தில் பதிந்த தமிழாக்கக் கவிதைகள் ‘பன்மொழிக் கவிதைகள் நம் மொழி தமிழில்..’ என்கிற தலைப்பில் தொடராக வெளிவர ஆரம்பித்துள்ளன.

அட்டையில் அறிவிப்பு:
#

மாயா ஏஞ்சலோ கவிதைகள்:
#
நன்றி வளரி! 
கடந்த ஒரு வருடமாக வளரி இதழின் முதன்மை ஆலோசகராக, ஆசிரியர் குழுவில் இணைந்து செயலாற்றி வருகிறேன் என்பது கூடுதல் தகவல்
ளிப்படங்களைப் பொறுத்த வரையில் ஃப்ளிக்கரில் தொய்வில்லாமல் தொடர்ச்சியாகப் படங்கள் பதிந்து வருகிறேன். அங்கே 2000 படங்களைக் கடந்ததும் இந்த வருடமே! எதில் ஆர்வம் அதிகமோ அதை எளிதில் விட்டு விட மாட்டோம் போலும்:)!

# ஜனவரியில் ‘தி இந்து’ இணைய தளத்தில் லால்பாக் மலர் கண்காட்சி புகைப்படத் தொகுப்பு:


நாகர்கோவிலில் மார்ச் 7,8 ஆகிய தினங்களில் மெர்வின் ஆன்டோ ஒருங்கிணைத்து நடத்திய புகைப்படக் கண்காட்சியில் எனது படங்கள்..
#

எடுத்த படங்கள் பல பத்திரிகைகளில்..
#
.

என் ஒளிப்பட அனுபவங்கள் குறித்து தினகரன் வசந்தத்திலும், அந்திமழையிலும்..
#

நிகழ்வுகளின் போது சந்தித்த இலக்கிய ஆளுமைகளின் படங்களும் சில பத்திரிகைகளில்.. கவிஞர் கலாப்ரியாவை எடுத்தபடம் ‘தி இந்து’ பத்திரிகைப் பேட்டியில்.. திரு. வெ.சா மற்றும் திரு. ஹரிகிருஷ்ணன் ஆகியோரை எடுத்த படங்கள் தென்றலில், தொடர்ந்து நவம்பர் ‘அந்திமழை’ இதழிலும்... திரு. வெ. சா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு.
#

ஃப்ளிக்கரில் explore என்றால் என்ன என்பது குறித்து ஏற்கனவே ‘இங்கே’ பகிர்ந்திருக்கிறேன். இவ்வருடம் explore ஆன படங்களில் ஒன்றாக திருமதி. சரஸ்வதி கலாப்ரியாவின் கருப்பு வெள்ளைப்படம்:
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/16744955610/

#

சமீபத்தில் explore ஆன மற்றுமோர் படம்:
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/23782741032/
#



இனிதாகத் தொடங்கட்டும் புது வருடம்!
#

இறைவனின் அருளோடு..

 இயற்கையின் கருணை சேர..

அனைவரது வாழ்விலும் வளம் பெருகட்டும்!

நண்பர்களுக்கும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்:)!
***

20 கருத்துகள்:

  1. அடக்கமாகச் சொன்னாலும்
    இதுவரை சாதித்துள்ளவை மிக மிக அதிகமே
    சாதனைகள் தொடர்ந்தும் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வரையில் சாதனை எனக் கருதவில்லை. தொடர்ந்து செயலாற்ற இந்தப் பட்டியல் ஒரு ஊக்கமாக இருக்குமென நம்புகிறேன்:)! வாழ்த்துகளுக்கு நன்றி, sir.

      நீக்கு
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    subbu thatha

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

    சிறப்பான படைப்புகள் ....வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் அக்கா...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  8. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  9. தொடரட்டும் நன் முயற்சிகள் வளரட்டும் பெயரும் புகழும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு