வியாழன், 31 டிசம்பர், 2015

நெல்லை ஓவியர் மாரியப்பன் படைப்புகள் - 2015 பெங்களூர் சித்திரச் சந்தை - பாகம் 2

2015 பெங்களூர் சித்திரச் சந்தை (பாகம் 1) ‘இங்கே


நெல்லையைச் சேர்ந்த ஓவியர் மாரியப்பனின் படைப்புகளை ஒவ்வொரு வருடமும் தனிப்பதிவுகளாகப் பகிர்ந்து வருகிறேன். அவற்றுக்கான இணைப்புகளைப் பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.


இந்த முறை நான் சென்றது பின் மாலை வேளையில். இவரது ஓவியங்களைக் காட்சிப் படுத்தியிருந்த இடத்தை நான் அடைந்த பொழுது இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது. ‘இத்தனை தாமதமாக வருகிறீர்களே. பெரிய அளவில் வரைந்த பல ஓவியங்கள் விற்று போனதுடன், எடுத்தும் சென்று விட்டார்களே’ என ஆதங்கப்பட்டார். பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதேயென ‘நீங்கள் படம் எடுத்திருப்பீர்களே. காட்டுங்களேன்’ என்றேன் ஆர்வமாக. பதிலுக்கு
‘ஊரிலிருந்து கிளம்பும் அவசரம், வந்த பிறகு வேலைகள். இவற்றுக்கு நடுவே படமெடுக்க விட்டுப் போயிற்று’ என்ற போது, ‘சிரமப்பட்டுப் படைத்தவற்றைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டீர்களே’ என ஆதங்கப்படுவது எனது முறையாகப் போயிற்று. சரி அதனால் என்ன? இப்போதெல்லாம் தான் படைக்கும் அழகிய ஓவியங்களை உடனுக்குடன் படமாக்கி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து நம் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளித்து வருகிறார்.  தொடர விரும்புவர்கள் வசதிக்காக அவரது பக்கம் Mariappan Artist.

Prime lens எடுத்துச் செல்லாத நிலையில், இருந்த குறைந்த ஒளியில் மீதமிருந்த படங்களை முடிந்த வரை காட்சிப் படுத்தியிருக்கிறேன்.

#1
விடிந்து விடியாத காலைப் பொழுதில் 
நிழலோடு விளையாடும் ஒளியில் 
நாளை வரவேற்கத் தயாராகும் நங்கையர்


#2 இசை வெள்ளம்
பண்டிட் ரவிஷங்கர்
#3 ஆடல்.. அபிநயம்..

#4 கலை வண்ணம்

#5 பட்டுப் பூ

#6 தவழும் தங்க நிலா


#7 கண்ணாமூச்சி ஏனம்மா..

#8 பிரகாசத்தைத் தேடி.. பிரகாரத்தில்..


#9
என்னதான் ஓவியங்களைப் படங்களில் கண்டு களித்தாலும் நேரில் இரசிக்கும் அனுபவம் தனிதான்.

வாய்ப்புள்ள பெங்களூர்வாசிகள் வரும் ஞாயிறு, 3 ஜனவரி 2016, சித்திரச் சந்தையின் பதிமூன்றாம் பதிப்புக்குச் செல்ல முயன்றிடுங்கள்! 

12 கருத்துகள்:

  1. அருமை. ஃபேஸ்புக்கிலும் அவரது ஓவியங்களைக் கண்டு களித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிக நன்றி ராமலக்ஷ்மி. தத்ரூபமான ஓவியங்கள். அவரது பக்கத்துக்கும் சென்று பார்க்கிறேன். திரு மாரியப்பனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. என் ஓவியங்களை உலகம் அறிய செய்த ராமலெட்சுமி அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது வருடம் மேலும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. கற்பனைத்திறன் அபாரம்.lights and Shades இயல்பாக இருக்கிறது. அருமை.

    பதிலளிநீக்கு