ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மூன்று தமிழும் ஓரிடம் நின்று..

ஒன்று.. இரண்டு.. மூன்று..

பார்த்ததும் பளிச் எனத் தெரிய வேண்டும் படத்தில்..

இதுதான் ‘தமிழில் புகைப்படக் கலை’ தளம் இம்மாதப் போட்டிக்கு அறிவித்திருக்கும் தலைப்பு..

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#1 சுற்றிச் சுற்றி வந்தீக..

#2 மைசூர் அரண்மனையின் தெற்குக் கோபுரங்கள்


#3 இதழ் மூன்று.. துளிர் மூன்று..

#4 கதிரொளியில் மொட்டுக்கள்..



#5 மலர்ந்த மூன்றும்.. மலரக் காத்திருக்கும் ஒன்றும்..


#6 மூன்று தமிழும் ஓரிடம் நின்று..



#7 .. பாட வேண்டும் காவியச் சிந்து!

#8 Marina Bay Sands, Singapore



#9
மூன்று வேளை உணவிலும் 
முக்கியத்துவம் இருக்கட்டும் 
ஆரோக்கியத்திற்கு.. :)


ப்படியாக  ஏதேனும் ஒரு விஷயம் மூன்று எனும் எண்ணிக்கையில் பிரதானமாக இருக்க வேண்டும், தெரிய வேண்டும்.

சுலபமான தலைப்புதானே? கேமரா கண்களோடு உலகை நோக்கினால் காட்சி சிக்காது போகாது. அல்லது வீட்டிலிருந்தபடியே கூட உங்கள் ரசனைப்படி பொருட்களை வைத்து எடுக்கலாம்.

போட்டி என்றாலே பயிற்சி பயிற்சி பயிற்சி! இதை மனதில் கொண்டால் போதும். கலையின் மீதான நம் திறன் வளரும்.

இதுவரை வந்த படங்கள் இங்கே. போட்டி விதிமுறைகள் இங்கே. படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 20 அக்டோபர்.

***

6 கருத்துகள்:

  1. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை
    போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மூன்று என்கிற தலைப்புக்கு விதம் விதமான படங்கள் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு