செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பவளமல்லியின் வாதை - சொல்வனம் (இதழ் 134)


வ்வப்போது வந்து போகிறவர்களால் 

வெடித்தெழும் அழுகை 

விசும்பலாகித் தேயவும்

கனத்த மெளனத்துள் 

புகுந்து கொள்கிறது துக்க வீடு.

காணப் பொறுக்காத 

முற்றத்துப் பவளமல்லி

உதிர்க்கத் தொடங்குகிறது பூக்களாக

மின்னற் பொழுதில் 

விண்மீனாகி விட்டவனின் நினைவுகளை.

கன்னங்குழியச் சிரித்த பிள்ளைக் காலத்துக்கு

கண்கள் மினுங்கப் பயணிக்கிறார் அம்மா.

கற்ற வித்தை யாவிலும்

வெற்றிக்கோப்பை ஏந்தி நின்றதை

புளங்காகிதத்துடன் நினைவு கூர்கிறார் அப்பா.

பதின்மத்தில் தன் பாவடையை அணிந்து 

சுழன்றாடியதைச் சொல்லும் பொழுதே

நகைக்கிறாள் அக்கா.

நண்பனாய் அடித்த அரட்டைகளில்

தமையனாய் அடைகாத்த அன்பில் 

திளைத்து நிற்கிறார்கள் தம்பி தங்கைகள்.

ஊருக்கெல்லாம் உதவியதாக 

உற்றார் போற்றியதை நினைந்து

பெருமிதம் உறுகிறார்கள் மனைவி மக்கள்.

தன் பங்காய்ப் பொன்னாச்சி 

பேரனின் பால்யக் குறும்புகளை

அடுக்கிக் கொண்டு போக

சிரிப்பால் நிறைகிறது முற்றம்.

ஓர்நொடி சிலிர்த்த மல்லிச் செடி

யாசிக்கிறது காலத்தை மறுநொடி

ததும்பிய அத்தனை விழிகளிலும்

தகித்த வெம்மை தாளாது.

*

படம்: இணையம்
*

ன்றி சொல்வனம்!


14 கருத்துகள்:

  1. கவிதை அருமை அக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இனி நினைவுகள் மட்டுமே துணையாய்...

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை ராமலெக்ஷ்மி. சொல்வனத்தில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு