வெள்ளி, 27 மார்ச், 2015

நாகர்கோவில் புகைப்படக் கண்காட்சியும்.. எனது படங்களும்..

நாகர்கோவில் நகரசபைத் தலைவர் திருமதி. மீனாதேவ் தொடங்கி வைக்க மார்ச் 7, 8 தேதிகளில் புகைப்படப்பிரியன் குழுமம் நடத்திய ”எக்ஸ்போஷர் 2015” கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அது குறித்த எனது முந்தைய அறிவிப்புப் பதிவு இங்கே.  கண்காட்சி குறித்து மேலும் அறிந்திட... தி இந்து செய்தி இங்கே. தின மலர் செய்தி இங்கே.

#2
படம் நன்றி: “நெல்லை வீக் என்ட் க்ளிக்கர்ஸ்”

இடம் பெற்றிருந்த ஆயிரத்துக்கும் மேலான ஒளிப்படங்களை ஆர்வத்துடன் கண்டு இரசித்திருக்கிறார்கள் பொது மக்கள். இவர்களில் பள்ளி மாணவர்களிலிருந்து அனைத்து வயதினரும் அடக்கம்.

நல்ல தரத்திலான பிரதிகளோடு, நேர்த்தியாகப் படங்களைக் காட்சிப் படுத்தி சிறப்பாக நிகழ்வைக் கொண்டு சென்ற மெர்வின் ஆன்டோவுக்கும், அவருக்கு துணையாக செயல்பட்ட நண்பர்கள் மூவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருந்த எனது 8 படங்களும் உங்கள் பார்வைக்காகவும் எனது சேமிப்பிற்காகவும் இங்கே. தேர்வு செய்து காட்சிப்படுத்திய மெர்வின் ஆன்டோவுக்கும், அவற்றைப் படமாக்கி அனுப்பி வைத்த ஒளிப்படக் கலைஞர் நித்தி ஆனந்த்துக்கும் என் நன்றி.

படம் ஒன்றில் இருக்கிற நான்கும் அரங்கின் முகப்பிலேயே இடம் பெற்றிருந்ததாகத் தெரிவித்தார், நித்தி ஆனந்த்.

அடுத்த மூன்று...

#3

இந்த வார “தினமலர் புதுப்பயணம் போட்டியில் பரிசு பெற்ற பாட்டியின் படம், வண்ணம், கருப்புவெள்ளை என இரண்டு பிரதிகளிலுமாக..

#4

கண்காட்சி நடந்து கொண்டிருந்த தினங்களிலேயே NWC ஃபேஸ்புக் ஆல்பத்தில்  எனது சில படங்களைப் பகிர்ந்திருந்த ஒளிப்படக் கலைஞர் G. மாரியப்பனுக்கும் நன்றி.

கீழ் வருபவற்றில் முதல் இரண்டும் முன்னர் முத்துச்சரத்தில் பதியாதவை.
மற்றவை பல்வேறு சமயங்களில் பல்வேறு பதிவுகளில் பகிர்ந்து நீங்கள் பார்த்திருக்கக் கூடும் என்றாலும் தனித்தனியாக பெரிய அளவில் மீண்டும் பார்வைக்கு...

அல்லி விழி அழகி.. ஆடி விளையாடம்மா..
#5
பெங்களூர் பூங்காவில் கண்ட பூ..

பூவோடு பேசாத காற்றென்ன காற்று.. ஒரு பூஞ்சோலை கேட்கின்றது..
#6

பேகல், கேரளா

2012 மைசூர் தசரா படங்கள்:

#7

#8



'மக்கா’ கிளி (ஜுராங் பூங்கா, சிங்கப்பூர்)

#9


உழைப்புக்கு ஓய்வில்லை..
#10 
பெங்களூர் லால்பாக்

முகம் மலர்ந்த சிரிப்பில் அகம் குளிர வைக்கும் அழகுப் பெண்
#11
நாட்டியத் தாரகை, TOI கிராமியத் திருவிழாவில்..
கோபுர தரிசனம்
#10
திருநாகேஸ்வரம்

***



14 கருத்துகள்:

  1. எதைச்சொல்ல? எதைவிட?

    மனம் நிறைந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  2. அல்லி விழி அழகியும், புன்னகை அழகியும் பிரமாதம்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. எல்லாப் படங்களுமே அழகு. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து படங்களும் மிக அருமை. வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் ஒவ்வொன்றும் உணர்வோடு பேசுகின்றன. அருமையான அர்த்தமுள்ள படங்கள்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு