சனி, 10 ஜனவரி, 2015

கனவும் இலக்கும்

#1
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி


#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha

#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்


#4
நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை எனச் சலிப்புறாமல், எண்ணிப் பார்ப்போம் இதுவரை கிடைத்த வரங்களை.

#5
“எதுவும் நிரந்தரமில்லை. நமது பிரச்சனைகளும் கூட.”
 _ Charlie Chaplin

#6
அற்புதங்களில் நம்பிக்கையற்றவர்களுக்கு அது நிகழ்வதேயில்லை.

#7
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் ஏற்படும் பயம் தற்காலிகமானது. செய்யாமலே போவதால் ஏற்படக் கூடிய வருத்தமோ நிரந்தரமானது.

#8
உற்றுக் கவனிப்பவர்களுக்கே கேட்கிறது பூமியின் இசையும், பூப்பூக்கும் ஓசையும்.

#9
“பிரச்சனைகளால் உந்தித் தள்ளப்பட்டு நகராதீர்கள். உங்கள் கனவுகளால் செலுத்தப்படுங்கள்.”
_Ralph Waldo Emerson


#10
"எட்டாத உயரத்தில் இலக்கை வைத்து அதை அடைய இயலாமல் போவதில் ஆபத்து ஏதுமில்லை. கைக்கெட்டும் தூரத்தில் வைத்து, எளிதில் அடைந்து, திருப்தியும் கொள்வதே அபாயகரமானது."
- Michelangelo

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது.
***

12 கருத்துகள்:

  1. வாசகங்களும் பூக்களும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன் பொன்மொழிகள் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஆனந்த முடிச்சுகள் உங்கள் வரிகள் ராமலக்ஷ்மி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பொன்மொழிகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு