வெள்ளி, 24 அக்டோபர், 2014

சிறந்த ஆசிரியர்கள்

 1. தீவிரமான நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

2. இணைந்து செயலாற்றினால் அதிகம் சாதிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை நாம் பார்க்கிற விதத்தை மாற்றிக் கொண்டால், பார்க்கின்ற விஷயங்களும் மாறத் தொடங்கும்.


4. ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் கூறித் திரியாமல்,
ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டால் கரைந்து போகும் காற்றோடு எத்தனையோ பிரச்சனைகள். 

5. சிறந்த ஆசிரியர்கள் நேரமும் வாழ்க்கையும் . நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வாழ்க்கை போதிக்கிறது. வாழ்க்கையின் மதிப்பை நேரம் உணரச் செய்கிறது.


6. கண நேரத் தயக்கத்தால் தவற விடுகின்ற நல்வாய்ப்புகள் காலத்துக்கும் தொடரக் கூடும் வருத்தங்களாக.

7. எண்ணிக் கொண்டே வருவோம் ஒவ்வொன்றாக, இதுவரை கிடைத்த வரங்களை. புரியும் அப்போது ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் நாம் என்பது.

8. உடனடியாக நடக்கவில்லை என்பதற்காக எப்போதுமே நடக்காமல் போய் விடாது.


9. கோபம் வரும் நொடியில் கடைப்பிடிக்கும் கண நேரப் பொறுமை காப்பாற்றக் கூடும் நம்மை வாழ்நாள் வருத்தத்திலிருந்து. [- Ali Ibn Talib.]


10. மற்றவர் மனம் தொடும் வாழ்வுக்கு முடிவென்பதே இல்லை.

*** 

[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]

14 கருத்துகள்:

  1. அருமை ராமலெக்ஷ்மி. தீர்க்கமான சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை.7வது மிகவும் பிடித்த சிந்தனை.
    நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அனைத்தும் அருமையான கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அருமையான சிந்தனைகள். அணில் படம் ரொம்பவே பிடித்தது....

    பதிலளிநீக்கு
  5. நல்ல சிந்தனைகள். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. அச்சோ... ஒன்றையொன்று விஞ்சும் அழகு. ஒருமுறை டிஜிட்டல் காமிராவில் அணிலைப் புகைப்படமெடுக்க முனைந்தேன். ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது. எப்படித்தான் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுக்க முடிந்ததோ? நிறைய பொறுமை வேண்டும் அதற்கு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. @கீத மஞ்சரி,

    நன்றி கீதா. ஆம் அணிலாரைப் படம் பிடிப்பது மிகச் சிரமமான ஒன்றே :). நிறைய ட்ரில் வாங்குவார்.

    பதிலளிநீக்கு
  8. @Nat Chander,


    உங்களின் இதே கருத்துக்கு ஏற்கனவே பதில் அளித்திருக்கிறேன் இங்கு: http://tamilamudam.blogspot.com/2014/07/blog-post_25.html

    இந்தத் தொகுப்புகளின் முதல் பதிவு இங்கே: http://tamilamudam.blogspot.com/2012/01/blog-post_30.html

    இந்தப் பதிலையாவது பார்ப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன்...

    நன்றி :) !

    பதிலளிநீக்கு