சனி, 19 ஜூலை, 2014

சந்தோஷமும் சமாதானமும்

#1 பால் போலவே..
வெள்ளை நிறம் அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளம் என்றால் மஞ்சள்  சந்தோஷத்துக்கும் வளமான வாழ்வுக்குமான அடையாளம்.
இந்த இரண்டு நிறங்களுமே நடுவர் சர்வேசனின் தேர்வாக அமைந்து விட்டுள்ளது PiT ஜூலை மாதப் போட்டிக்கு. அதாவது இந்த இரண்டு நிறங்களில் ஒன்றைப் பிரதானமாகப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் படங்கள். இரண்டு நிறங்களும் சேர்ந்து அசத்தினாலும் சரிதான்.

அழகான மாதிரிப் படங்களுடன் அறிவிப்புப் பதிவு இங்கே. குறிப்பாக, ஒரு எலுமிச்சையை எத்தனை அற்புதமாகக் காட்டியிருக்கிறார் ஆனந்த் விநாயகம் என்பதைக் காணத் தவறாதீர்கள்.

நெருங்கும் கடைசித் தேதியை உங்களுக்கு நினைவுறுத்தி மேலும் சில மாதிரிப் படங்கள், (முன்னர் இங்கு பகிர்ந்திராதவையாக):

#2
‘சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்..’

#3
‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
விடியும் பூமி அமைதிக்காக விடியவே..’
#4 தங்க மிளகாய்
நேரம் கிடைத்தால் தலைப்புக்காக ஒரு புதுப்படமேனும் எடுத்துப் பகிருவது வழக்கம்.  மாட்டியது இந்தத் தங்க மிளகாய்.

போட்டிக்கு வந்திருக்கும் படங்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கண்டு இரசிக்க இங்கே செல்லுங்கள். அவற்றோடு உங்கள் படம் சேர வேண்டியக் கடைசித் தேதி: 20 ஜூலை 2014.
*** 

15 கருத்துகள்:

  1. வணக்கம்

    தகவலுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. கண்ணுக்கு குளுகுளுன்னு இருக்கும் அழகிய படங்கள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி. போட்டியில் கலந்துகொள்ளவிருப்பவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வெள்ளை நிறம் அமைதிக்கும், சமாதானத்துக்கும் மட்டுமல்ல தூய்மைக்குமான நிறம்! :))

    எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் படங்களும் மிக அருமை ராமலக்ஷ்மி, அதிலும் தங்கமிளகாய் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு