வியாழன், 30 ஜனவரி, 2014

'எங்கள் Blog' ஸ்ரீராம் பார்வையில்.. இலைகள் பழுக்காத உலகம்

எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் நண்பரான ஸ்ரீராம் அவர்களது பார்வையில்.. இலைகள் பழுக்காத உலகம்:



நீள நீளமாய்க் கவிதைகள் எழுதுவது என்னைப் பொருத்தவரைக் கடினமான செயல். நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி  விடுகிறது! பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது. பல்துறை வித்தகர். கதை, கவிதை, கட்டுரை, பயண அனுபவங்கள் என்று எழுதுவதோடு மூன்று தளங்களில் ஆசிரியர் பொறுப்பும். அப்புறம் அவரது ஸ்பெஷல் ஃபோட்டோக்ராஃபி.
          
நவீன விருட்சம், கீற்று, கல்கி, விகடன், உயிரோசை, சொல்வனம், மல்லிகை மகள், தேவதை என்று பல்வேறு இடங்களிலும் வெளிவந்த அவரது கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்த நூல். மிகச் சமீபத்தில் கல்கியில் வந்த அவரது 'நாளினை நனைத்த சொற்களு'ம் கூட நூலில் இடம் பெற்றிருப்பதற்கு அகநாழிகைப் பொன் வாசுதேவனைப் பாராட்ட வேண்டும். அவரை இன்னொரு விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ரோஜாப் பூந்தோட்டம் - லால்பாக் பெங்களூர் - ( Bangalore Lalbagh Flower Show 2014 )

#1 மலர்கள் பேசுமா...
17 ஜனவரி 2014  ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் லால்பாக் குடியரசுதினக் மலர்க் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த முறை ‘பூக்கும் பழங்கள்’ காட்சிப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறது TOI.  வெறொன்றுமில்லை.. பழங்கள், காய்கறிகளைச் சேர்க்கச் சிணுங்கும் குழந்தைகளைப் பார்த்துக் கைநீட்டி அழைக்கும் வகையில் மாம்பழம், வெங்காயம், கேரட், மாதுளை, பூண்டு ஆகிய வடிவங்களில் பூ அலங்காரங்கள் இடம்பெற்றிருக்கின்றன கண்ணாடி அரங்கில். கூடவே மெகா Bunny Rabit ஒன்றும். ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று வாருங்கள்.

வழக்கமாக இரண்டு பிரதான வடிவங்கள் முடிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அப்படியில்லாமல் இந்தக் கருவை மையமாகக் கொண்டதற்கு ஒரு காரணமும் உள்ளது.  பொன்விழா கொண்டாடுகிறது இவ்வருடம் கர்நாடகாவின் தோட்டக்கலை இலாகா. ஐம்பதாண்டு நிறைவை அனுசரித்தே இந்த காய்-கனி-மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

புதன், 22 ஜனவரி, 2014

கலைத் திருவிழா - 2014 பெங்களூர் சித்திரச் சந்தை - பதினோராம் பதிப்பு

ழக்கமாக ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறு நடைபெற்ற பெங்களூர் சித்திரச்சந்தையின் பதினோராம் பதிப்பு இந்த வருடம் முதல் ஞாயிறில் ஜனவரி ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது, 3 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்று, ஒரு கோடி ரூபாய் விற்பனையைத் தொட்டு.

#1

திருவிழா காணும் கலைக்கோவில் சித்திரக்கலா பரிக்ஷ்த் கலைஞர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் பாலமாக அமைந்து ஓவியக் கலையை வளர்க்கும் போற்றத் தகு சேவையைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது. 

[படங்கள் திறக்க நேரம் எடுத்தால், ஏதேனும் ஒரு படத்தின் மேல் க்ளிக் செய்தால், லைட் பாக்ஸில் வரிசையாக இரசிக்கலாம்.]
# 2

எள் விழ இடமில்லை என்பார்களே, அப்படியானக் கூட்டம்.  என் ஐந்தடி உயரத்துக்கு சிக்கிய மேலிருக்கும் படம் திருப்தி தராததால் கேமராவை மேலே தூக்கிப் பிடித்து எடுத்தபடம் கீழே:).  எம்பிப் பார்த்தால் இதே போன்ற மனித வெள்ளம்தான் சுமார் ஒன்றைரை இரண்டு கிலோமீட்டர் நீளமான குமரக்ருபா சாலை முழுவதும். இந்த பிரதான சாலையில் மட்டுமின்றி அதன் குறுக்குத் தெருக்களிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓவியர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
#3
பதிவு செய்து இடம் பெற்றவர்கள் 1200 பேர்கள் என்றால் ஆர்வத்தின் பேரில் படங்களுடன் இடம்பிடித்து விட்ட ஓவியர்கள் நூறு பேராவது இருப்பார்கள் என்கிறது செய்தி. மொத்த ஓவியர்களில் 30 சதவிகிதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 20 மாற்றுத் திறனாளிகள் தங்கள் கலைத் திறனைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

திங்கள், 20 ஜனவரி, 2014

சராசரி மனிதர்களின் மீது நெய்யப்பட்ட சம்பவங்களின் கதைகள் - நன்றி திரு. ரிஷபன்!

டை மழை போன்றதானது மனிதருக்கிடையேயான பல்வேறு உணர்ச்சிப் பிரவாகங்கள். வானவில்லாய் அவ்வப்போது சில தருணங்கள் வந்துவிட்டுப் போகின்றன. ஒரு சரிவின் விளிம்பில்.. நிராதரவின் எல்லையில்.. துக்கக் கனவின் உச்சியில்.. ஏதேனும் ஒரு கரம் நீண்டு கைதூக்கி விட்டுப் போகிறது. ஒரு வரியோ.. ஒரு கவிதையோ.. ஒரு கதையோ.. விடை தேடி சலித்துப் போன மனசுக்கு மயிலிறகு ஒத்தடம் தந்து விடுகிறது.

என்ன சொன்னாலும் என்னதான் மறுத்தாலும் நமக்கு உணர்வின் ஆதிக்கம் இருக்கிறது. வார்த்தைகளின் தாக்கம் இருக்கிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் அழகான அணிவகுப்பில் சட்டென்று ஒரு மந்திரப் புன்னகை மலர்ந்து விடுகிறது. பன்முகத் திறன் கொண்ட ராமலக்ஷ்மியின் 'அடை மழை' அத்தகைய ஜாலங்களை உள்ளடக்கிய கதைகளின் அழகிய முதல் தொகுப்பாய் வந்திருக்கிறது.

சனி, 18 ஜனவரி, 2014

சீட்டு விளையாடத் தெரிந்திருப்பது அவசியம்தானா?

இம்மாத PiT போட்டிக்கு 'சீட்டுக்கட்டு விளையாடத் தெரிந்திருக்க அவசியம் இல்லை. அதன் வடிவங்கள் நான்கையும் அறிந்திருந்தாலே போதும்.’ என்கிறார் நடுவர் ஆன்டன். அறியாதவர் இருக்கிறீர்களா என்ன:)? ஆனாலும் அழகுத் தமிழில் வரிசைப் படுத்தியிருக்கிறார் நான்கு வடிவங்களையும் அறிவிப்புப் பதிவில் இப்படி:
  • ஈட்டிமுனை வடிவம் (Spade) - 
  • இதய வடிவம் (Heart) - 
  • சாய்சதுர வடிவம் (Diamond) - 
  • மூன்று பக்க இலை வடிவம் (Club) - 

நீங்கள் எடுக்கிற படங்கள் இந்த வடிவங்களில் ஒன்றைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும். ‘நூற்றுக்கு நூறு சதவிகிதம் துல்லியமாய் இருக்க வேண்டியதில்லை. ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரதிபலித்தால் சரி’ என நடுவர் பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் ‘உங்கள் கற்பனைத் திறனில் அவ்வடிவம் மெருகு பெற்று, ஒளிப்படக் கலையின் முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தாலே வெற்றி பெறும்’ என்றும் சொல்லியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:)!

மாதிரிக்கு நான் எடுத்தவற்றில் சில:
#1 
 
#2 

#3

வியாழன், 16 ஜனவரி, 2014

இரு நூல்கள் வெளியீடும்.. நட்புகளின் அன்பும்.. மனம் நிறைந்த நன்றியும்..


நேற்று மதியம்  “இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்பை சென்னைப் புத்தகக் கண்காட்சி புதுப்புனல்-அகநாழிகை அரங்கு எண்கள் 666,667-ல் வெளியிட்ட கவிஞர் மதுமிதாவுக்கும் பிரதியைப் பெற்றுக் கொண்ட கவிஞர் தி. பரமேஸ்வரிக்கும் நன்றி. கலந்து கொண்டு சிறப்பித்த ‘மலைகள்’ இதழின் ஆசிரியர் சிபிச் செல்வன், ‘உயிர் எழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்தில், கவிஞர் அய்யப்ப மாதவன் மற்றும் சூர்யா சுரேஷ் ஆகியோருக்கு அன்பு நன்றி.

#1

#2
சாந்தி மாரியப்பனின் (அமைதிச்சாரல்) ‘சிறகு விரிந்தது’ கவிதைத் தொகுப்பு வெளியீடும் நடைபெற்றது. வாழ்த்துகள் சாந்தி:)!

#3
மாலை ஐந்து மணி அளவில் இதே அரங்கில் “அடை மழை” சிறுகதைத் தொகுப்பை நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அன்புடன் சம்மதித்து, வெளியிட்ட எழுத்தாளர் சுகா அவர்களுக்கும் பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் தமிழ்நதிக்கும் நன்றி.
#4
#5

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

டாலியா, ஆம்பல் மற்றும் சூஸன் - ( Bangalore Lalbagh Flower Show 2014 )

பெங்களூர் லால்பாக் இன்னும் சில தினங்களில் வரப் போகும் குடியரசு தினக் கண்காட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 2013 சுதந்திர தினக் கண்காட்சியில் அள்ளி வந்த அழகில் ஒரு பாதியைதான் உங்கள் கண்ணுக்குக் காட்டியிருக்கிறேன். அதற்குள் இரண்டு பதிவாவது தர விரும்புகிறேன் மலர்களின் அணிவகுப்போடு...

இன்று டாலியா, ஆம்பல் மற்றும் Black Eyed Susan ஆகியவற்றை ரசிக்கலாம் வாருங்கள்...
#1
#2

#3

வெள்ளி, 10 ஜனவரி, 2014

கற்பனைப் பேரலை - “மீன்கள் துள்ளும் நிசி” நிலா ரசிகனின் கவிதைத் தொகுப்பு - என் பார்வையில்.. - நன்றி கீற்று!

இயற்கை தரும் ஆச்சரியங்கள் எத்தனைக்கு எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையானது வாழ்க்கையும். இதை உணரும் உள்ளத்திலிருந்து பிறக்கிற கவிதைகளில் தென்படும் நேர்மை, நித்தம் உதிக்கும் சூரியனுக்கு ஒப்பானது. பிரபஞ்சத்தை இயக்குவது ஒரே சக்தி. செடி, மரம், பறவை, மீன், விலங்கு, மலை, கடல், வனம், அருவி, ஆறு, மனிதன், சூரியன், நிலவு, விண்மீன், கோள்  எல்லாவற்றுக்கும் பின்னாலிருக்கும் சக்தி ஒன்றே.  நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் இயற்கைக்குப் பின்னாலிருக்கும் விதிகள் யாவும் இந்த ஒரு மகா சக்தியின் பல வடிவங்களே. இந்த உண்மையில் வியந்து தன்னைத் தொலைக்கிற கவிஞன் இன்னும் ஆழமாக இயற்கையை அவதானிக்கவும் நேசிக்கவும் தொடங்குகிறான். அவற்றின் ஒவ்வொரு அசைவையும் தன் எண்ணங்களோடும் வாழ்வோடும் தொடர்புடையதாக்கியும் கொள்கிறான்.

வியாழன், 9 ஜனவரி, 2014

இலைகள் பழுக்காத உலகம் - 2014 சென்னை புத்தகக் கண்காட்சியில்..

என் கவிதைகள் என் உணர்வுகள்! என் புத்தகங்கள் என் அடையாளங்கள்! “அடை மழை” யைத் தொடரும் “இலைகள் பழுக்காத உலகம்” என் முதல் கவிதைத் தொகுப்பு. சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பக வெளியீடாக..

நாளெல்லாம் சிறகடித்து எங்கெங்கு சுற்றிப் பறந்தாலும் அந்தியில் ஆழ்ந்துறங்கக் கூடு திரும்பும் இந்தப் பறவைகளைப் போல், அலைபாயும் மனங்கள் இளைப்பாறி அமைதியுறக் கூடுகளைத் தாங்கி நிற்கின்றன கவிதை மரங்கள். குதூகலமோ குழப்பமோ ஆனந்தமோ அயர்ச்சியோ .. நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் நாள் தோறும் வழங்கும் அனுபவங்களால் எழும் எத்தகு உணர்வுகளையும் ஆற்றுப்படுத்தும் அல்லது கூடச் சேர்ந்து கொண்டாடும் கவிதையின் கருணை மிகு கைகளை நான் பற்றிக் கொண்டது பள்ளிப் பருவத்தில். நானே விட்டு விட நினைத்தாலும், முடியாது உன்னாலென்றபடி தோழமையுடன் தன் கரங்களுக்குள் என் கரத்தை இன்றளவும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற கவிதைக்கு நன்றி! இந்நூலினால் என்னை விட அதிக மகிழ்ச்சி அடைவது கவிதையாகவே இருக்க முடியும்.

வியாழன், 2 ஜனவரி, 2014

அடை மழை - என் முதல் நூல், அகநாழிகை வெளியீடாக..

அடை மழை.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு, அகநாழிகை பதிப்பகத்தின் மூலமாக வெளியாக உள்ளது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.


இதை சாத்தியமாக்கியதில் நண்பர்கள் உங்களின் பங்கும் இருக்கிறது. கதைகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும் பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மடல்கள் மூலமாகவும் கருத்துகளை, விமர்சனங்களை, நிறைகுறைகளைப் பகிர்ந்து எழுத்தைச் செதுக்கிக் கொள்ள உதவியிருக்கிறீர்கள்.

புதன், 1 ஜனவரி, 2014

விடை பெற்ற வருடத்தில்.. முத்துச்சரம்

விடை பெற்ற வருடத்தைத் திரும்பிப் பார்ப்பது என்பது சிறப்பான தருணங்களை நினைத்து மகிழ மட்டுமின்றி பிறந்திருக்கும் புது வருடத்தை உற்சாகமாக எதிர் கொள்ளவும், இந்த வருடத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிடவும் உதவவே செய்கிறது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் எடுக்கிற நிலைப்பாடுகளில் எவற்றையெல்லாம் சரியாகப் பின்பற்றுகிறோம் என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் ஓரளவேனும் அவை நாம் செல்ல வேண்டிய பாதையை சீர் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

2013 ஆம் ஆண்டினை வேகமாக ஒரு பார்வை:)!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

2014

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***