வியாழன், 9 ஜனவரி, 2014

இலைகள் பழுக்காத உலகம் - 2014 சென்னை புத்தகக் கண்காட்சியில்..

என் கவிதைகள் என் உணர்வுகள்! என் புத்தகங்கள் என் அடையாளங்கள்! “அடை மழை” யைத் தொடரும் “இலைகள் பழுக்காத உலகம்” என் முதல் கவிதைத் தொகுப்பு. சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பக வெளியீடாக..

நாளெல்லாம் சிறகடித்து எங்கெங்கு சுற்றிப் பறந்தாலும் அந்தியில் ஆழ்ந்துறங்கக் கூடு திரும்பும் இந்தப் பறவைகளைப் போல், அலைபாயும் மனங்கள் இளைப்பாறி அமைதியுறக் கூடுகளைத் தாங்கி நிற்கின்றன கவிதை மரங்கள். குதூகலமோ குழப்பமோ ஆனந்தமோ அயர்ச்சியோ .. நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் நாள் தோறும் வழங்கும் அனுபவங்களால் எழும் எத்தகு உணர்வுகளையும் ஆற்றுப்படுத்தும் அல்லது கூடச் சேர்ந்து கொண்டாடும் கவிதையின் கருணை மிகு கைகளை நான் பற்றிக் கொண்டது பள்ளிப் பருவத்தில். நானே விட்டு விட நினைத்தாலும், முடியாது உன்னாலென்றபடி தோழமையுடன் தன் கரங்களுக்குள் என் கரத்தை இன்றளவும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற கவிதைக்கு நன்றி! இந்நூலினால் என்னை விட அதிக மகிழ்ச்சி அடைவது கவிதையாகவே இருக்க முடியும்.

2008-ல் முத்துச்சரம் கோர்க்கவென இணையத்துக்குள் வந்த பிறகு அறிமுகமான இணைய மற்றும் சிற்றிதழ்கள், பிற கவிஞர்களின் தளங்கள் மூலமாக பெருகிய வாசிப்பு, என் கவிமொழியையும் செதுக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மொழி பெயர்ப்பு இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் ஈடுபாட்டினால் இப்பொழுது பன்மொழிக் கவிஞர்களின் படைப்புகளுக்குள் கவிதையோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் எடுத்த படங்களில் பொருத்தமானதைத் தேர்வு செய்து, சிறப்பாக வடிவமைத்து, தொகுத்து நூலாகக் கொண்டு வரும் அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கு மீண்டும் என் நன்றி. 

பிப்ரவரி 2013 ‘புன்னகை’ கவிதை இதழை எனது கவிதைகளின் சிறப்பிதழாக வெளிக் கொண்டு வந்ததுடன் தற்போது இந்தத் தொகுப்புக்கும் மதிப்புரை வழங்கி என் கவிதைகளைக் கெளரவித்திருக்கும் கவிஞர் க. அம்சப்ரியா (புன்னகை கவிதை இதழ் ஆசிரியர்) அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.

கவிதைகளை வெளியிட்டப் பத்திரிகைகள், சிற்றிதழ்கள், இணைய இதழ்களுக்கும் மனமார்ந்த நன்றி.

நூல் அறிவிப்பானதும் மகிழ்ச்சியைத் தெரிவித்தவர்களுக்கும், தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும், குறிப்பாக மேலும் புத்தகங்கள் வரட்டுமென சென்ற பதிவில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி:)! இரண்டு நூல்களையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்:)!

இலைகள் பழுக்காத உலகம்
 (கவிதைத் தொகுப்பு)
பக்கங்கள்:96  / விலை: ரூ 80

அடை மழை 
(சிறுகதைத் தொகுப்பு)
பக்கங்கள்: 112  / விலை: 100

வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்

கிடைக்கவிருக்கும் இடம்:

சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அரங்கு எண்கள் 666 & 667_ல்

மற்றும்

அகநாழிகை புத்தக உலகம்,
எண்: 390, அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
[வெளிநாட்டினரும் தபால் மூலமாக பெற்றிடும் வசதி உள்ளது]
***

29 கருத்துகள்:

  1. வணக்கம்

    தங்களின் வெற்றிப்பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    அடை மழையை தொடர்ந்து இலைகள் பழுக்காத உலகம், அடுத்து உலகத்தில் வாழும் மனிதர்களை உங்கள் கதையில் உயிர்யோட்டமாய் உலவ விட்ட கதை தொகுப்பு மலரட்டும்.
    வாழ்த்துக்கள் மேலும் பல!

    பதிலளிநீக்கு
  3. இலைகள் பழுக்காத உலகம்” என் முதல் கவிதைத் தொகுப்பு. சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பக வெளியீடாக மலர்வதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  4. இலைகள் பழுக்காத உலகம்...love the heading ...
    மனமார்ந்த வாழ்த்தக்கள்....

    பதிலளிநீக்கு

  5. வாழ்த்துகள். பெயரும் புகழும் மேலும் பெற.

    பதிலளிநீக்கு
  6. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள். புத்தக கண்காட்சியில் வாங்கி விடுகிறேன்...

    பதிலளிநீக்கு

  8. வாழ்த்துகள். உங்கள் படங்களே புத்தகத்தில் இடம்பெறுவது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  9. ஆகா.. வாழ்க வாழ்க! பாராட்டுக்கள்.

    'இலைகள் பழுக்காத உலகம்' என்றால் என்ன பொருள்?

    பதிலளிநீக்கு
  10. ராமலக்ஷ்மி 2014 ல் புத்தகமா வெளியிட்டு பட்டைய கிளப்புறீங்களே :-)சூப்பர்

    உங்களுக்கே தெரியும் கவிதைக்கும் எனக்கும் வெகு தூரம். எனவே வாழ்த்துகள் மட்டும் :-)

    பதிலளிநீக்கு
  11. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம், புத்தகங்களை நேற்று கண்காட்சியில் வாங்கி விட்டதற்கும்:).

    பதிலளிநீக்கு
  12. @கிரி,

    தெரியும். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கிரி:).

    பதிலளிநீக்கு
  13. மேலும் பல சிறப்புகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள்....

    சென்னை வரும்போது தான் வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு