திங்கள், 28 அக்டோபர், 2013

கல்கி தீபாவளி மலர் 2013-ல்.. - ‘நீங்கதான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்..’

330 பக்கங்களுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள
2013 கல்கி தீபாவளி மலரில் எனது ஒளிப்படங்கள் இரண்டு:)! 
நன்றி கல்கி!

பக்கம் 227-ல்..

சனி, 26 அக்டோபர், 2013

யுகமாய் நீ - நவீன விருட்சத்தில்..

கூட்டை உடைத்துக் கொண்டு நீ
வெளியில் வரக் கேட்டுக் கொண்டது
வரலாற்றின் ஒரு காலக் கட்டம்

தயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து
பெண்ணே நீ
உயர உயரப் பறந்து பொழுது
செம்பிழம்புச் சூரியன்
வெம்மை உனைத் தாக்கிடுமோவென
முகில்களுக்குப் பின் ஒளிந்து கொண்டது

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்.. - அக்டோபர் PiT

நிகழ்வுகள். 

இதுதான் இம்மாதத் தலைப்பு. மக்கள், நட்புகள், உறவுகள் கூடுகிற நிகழ்வுகள் எதுவானாலும் இருக்கலாம்.

#1 இன்று உலக செஃப் தினம் :)!

எந்த நிகழ்வானாலும் நினைவுகளை காலத்துக்கும் நிறுத்தி வைப்பதில் நிழற்படங்களின் பங்கு பிரதானமானது. அதை மனதில் கொண்டு சற்று கூடுதல் கவனத்துடன் மைய நிகழ்வை மட்டுமின்றி சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்துப் படமாக்குவது பலநாட்கள் கழித்தும் பார்க்கும் போது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையை நமக்குச் சொல்வதாக அமையும்.

#2

அலங்காரங்கள், தோரணங்கள், விருந்தினர்கள், மகிழ்வுடன் அளவளாவும் தருணங்கள், குழந்தைகள், அவர்களது ஆட்டபாட்டங்கள், தயாராகும் உணவு, பரிமாறப்பட்ட பந்தி, மேஜையில் வரிசைப்படுத்தப்பட்ட பதார்த்தங்கள், கேக் என சொல்லிக் கொண்டே போகலாம். [நடுவர் சுரேஷ்பாபு (கருவாயன்) அறிவிப்புப் பதிவில் காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் சிறந்த உதாரணங்கள்.] முக்கிய தருணங்களில் continous mode போடுவது ஒரு நொடியின் பாதியில் ஓர் அரிய உணர்வை சிறைப்படுத்தும் வாய்ப்பைத் தரலாம். இங்கே ஒரு பிறந்தநாள் நிகழ்வின் சில படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றாலும் உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை:)!

#3

வெள்ளி, 18 அக்டோபர், 2013

"மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல்..." - சுகா

நெல்லை பொருட்காட்சி குறித்த எனது பதிவில்.. மலரும் நினைவுகளாக சுகா அவர்கள் பகிர்ந்து கொண்டது, நீங்களும் இரசிக்க இங்கே:

பொருட்காட்சி சீஸனும், குற்றால சீஸனும் ஒண்ணு போல வர்றதால காத்துல தலைமுடி கலையும். நம்ம ஊரு பாஷைல ஒலையும்.அதனால எப்பவுமே கைவசம் சீப்பு இருக்கும்.

‘தலைய சீவுல. இன்னைக்கு நெறய பிள்ளேள் வந்திருக்கு’.

உள்ளே நுழையும் போதே குஞ்சு சொல்லுவான்.

வியாழன், 17 அக்டோபர், 2013

குழந்தைப் பருவம் - ஆங்கிலக் கவிதை



எப்போது தொலைந்தது என் குழந்தைப் பருவம்?
பதினொரு வயது முடிந்த தினத்திலா,
நரகமும் சொர்க்கமும் பூகோள வரைபடத்தில்
கிடைக்காது என உணர்ந்த தருணத்திலா,
ஆகையால் அவை இருக்க வாய்ப்பில்லை எனும்
முடிவுக்கு வந்த நாளிலா!

வியாழன், 10 அக்டோபர், 2013

நெல்லை ‘அரசுப் பொருட்காட்சி’ - படங்கள் 25



#1. சொக்குதே மனம்

அதே வளையல், பிளாஸ்டிக், தட்டுமுட்டுச் சாமான் கடைகள்; விளையாட்டுப் பொருட்கள்; கலை நிகழ்ச்சிகள், ரெகார்ட் டான்ஸ்; மெகா அப்பளம், பானி பூரி, மெளகா பஜ்ஜி.., ஜீப், ஹெலிகாப்டர், டிராகன் சீசா, குதிரை சவாரி, கப் அண்ட் சாஸர் ரைட்; அதே பேய் உலகம், அதே ஜெயண்ட் வீல்...

#2. போலாம் வாங்க..

வருடா வருடம் எல்லாம் அதே அதேதான், என்றாலும் அலுப்பதில்லை சலிப்பதில்லை நெல்லை மக்களுக்குப் பொருட்காட்சி. ‘என்னத்த புதுசா....’ என இழுத்தபடியே, கிளம்பி விடுவார்கள்:)! ஒவ்வொரு வருடமும் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தையொட்டி ஜூன் மூன்றாம் வாரத்தில் தொடங்கி 45 நாட்களுக்கு நடக்கிறது நெல்லை அரசுப் பொருட்காட்சி.

‘ஏல ஓடாத..’
‘ஏட்டி கையப் பிடிச்சிட்டுக்கிட்டு நடன்னு சொல்லுதன்ல..’
எனக் குழந்தைகள் பின்னால் ஓடும் பெற்றோர்கள்..

‘எப்ப வந்திய ஊர்லருந்து?’
‘என்ன மயினி சவுக்கியமா? அண்ணாச்சி வரலியா’
‘என்னல, இப்படித் துரும்பா எளச்சிட்ட?’
 நிறைந்து வழிகின்றன மைதானமெங்கும் குசல விசாரிப்புகள். எங்கெங்கு திரும்பினாலும் வெள்ளந்தி மனிதர்கள்.

பொருட்காட்சி நடக்கும் சமயத்தில் ஊர் போக வாய்க்காதவர்களுக்காகவும், அப்படியே சென்றிருந்தாலும் போக நேரமில்லாது போனவர்களுக்காகவும், வேறு நகரங்கள், நாடுகள் என இடம் பெயர்ந்து விட்டாலும் ஊருடனான நினைவுகளை நெஞ்சோடு சுமந்து கொண்டிருப்பவர்களுக்காகவும்... இந்தப் பதிவு!

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1)

உங்கள் மகிழ்ச்சி, முகமூடியைக் கழற்றிய உங்கள் வருத்தமே.
உங்கள் சிரிப்பு கிளம்பிய அதே கிணறுதான் நிரப்பப்படுகிறது அடிக்கடி உங்கள் கண்ணீராலும்.
வேறெந்த விதமாய் இருக்க முடியும்?
எத்தனை ஆழமாக அந்தத் துயரால் நீங்கள் செதுக்கப்படுகிறீர்களோ, அத்தனை அதிகமாய் மகிழ்ச்சி உங்களுள் நிறைகிறது.

உங்கள் திராட்சை இரசத்தை ஏந்தும் அதே கோப்பை, குயவனின் அடுப்பில் சுட்டெடுக்கப் படவில்லை?
உங்கள் ஆன்மாவை வருடி ஆறுதலளிக்கும் யாழ்.. அதன் மரம், கத்திகளால் குடையப்படவில்லை?

நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கும்போது, உங்கள் இதயத்தை உற்று நோக்குங்கள், உங்களுக்குத் துயரைக் கொடுத்த இதயமே இப்போது மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என அறிய வருவீர்கள்.
நீங்கள் வருத்தமாக இருக்கும்போது மீண்டும் இதயத்தைப் பாருங்கள், உங்களுக்குக் குதூகலத்தைத் தந்த ஒன்றிற்காகவே இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறீர்கள் எனும் உண்மை புரியவரும்.

உங்களில் சிலர் சொல்வீர்கள், “துயரை விட மகிழ்ச்சி உயர்ந்தது,” என, மற்ற சிலர், “இல்லை, துயரே உயர்ந்தது” என.
ஆனால் நான் உங்களுக்கு சொல்வேன், அவை பிரிக்க இயலாதவை.
சேர்ந்தே அவை வரும், ஒன்று தனியாக உங்கள் அருகே இருக்கையில் அமரும் போது, இன்னொன்று உங்கள் படுக்கை மேல் உறங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் ஒரு தராசாகத் தொங்குகின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சிக்கும் உங்கள் துயருக்கும் மத்தியில்.
காலியாக இருக்கும் போது மட்டுமே நிலையாகவும் சமனாகவும் இருக்கிறீர்கள்.
பொக்கிஷ அதிகாரி தன் தங்கத்தையும் வெள்ளியையும் அளக்க உங்களைத் தூக்கும் போது, நிகழ்ந்தே தீருகிறது உங்கள் மகிழ்ச்சியோ வருத்தமோ உயர்வதும் தாழ்வதும்.
***

மூலம்: On Joy and Sorrow from “The Prophet
By Kahlil Gibran (1883 – 1931)

லெபனானில் பிறந்தவர். குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர, அங்கே கலைப்பிரிவில் சேர்ந்து பயின்று எழுத்தாளராகவே வாழ்க்கையைத் தொடங்கினார்.  ஆங்கிலம், அரபு இரண்டு மொழிகளிலும் எழுதி வந்தார்.  அரபு நாடுகளில் இவர் எழுத்தாளராக மட்டுமின்றி ஆட்சி எதிர்ப்பாளராகவும் அறியப்பட்டார். லெபனானில் இவரையே தலைசிறந்த இலக்கியவாதியென இன்றளவிலும் கொண்டாடுகிறார்கள்.

1923-ல் ஆங்கிலத்தில் வசன கவிதையாக இவர் எழுதிய “The Prophet” புனைவு
உலகை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே விற்பனையிலும் சாதனை படைத்தது. ஷேக்ஸ்பியர், Laozi ஆகியோருக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் இருக்கின்றன உலகளாவிய விற்பனையில் இவரது புத்தகங்கள். கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி மட்டுமின்றி சிறந்த சிற்பியும் ஓவியருமாவார் கலீல் ஜிப்ரான்.
***


வியாழன், 3 அக்டோபர், 2013

நூற்றுக்கு நூறு

சமீபத்திய தினமொழிகள் பத்து, எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..

1. வானம்தான் எல்லையா? வரவேற்கும் சாலைகளில் சென்று பார்க்கலாம். மைல் கணக்கில் நடக்கலாம். கற்றுத் தரக் காத்திருக்கும் உலகம் மிகப் பெரிது.

2.
100%
நம்மால் முடியும் என மனதளவில் தயாராகி விட்டோமா? நமது எண்ணம் நூறு சதவிகிதம் சரி.