திங்கள், 11 ஏப்ரல், 2011

நிசப்தத்தின் சப்தம் - வடக்கு வாசலில்..


பச்சிளம் புதுத்தளிரின்
நுனிப்பொட்டில் சொட்டும் மழைத்துளி

இடவலமாய் மிக நளினமாய்
அசைந்து மிதந்து தரைசேரும் சருகு

அணில் குஞ்சின் மழலை
காற்றின் ஊதல் கிளைகளின் ஆடல்

இயற்கையின்
ஒவ்வொரு அதிர்விலும் அசைவிலும்
எழும்பும் ஓசைகள் எத்தனை

தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே
கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
பிரபஞ்சத்தின் நிசப்தம்.
***

படம்: இணையத்திலிருந்து..

மார்ச் 2011 வடக்கு வாசல் இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும்.., நன்றி வடக்கு வாசல்!













53 கருத்துகள்:

  1. எஸ்!!! அவசரவசரமாய் சுற்றி திரிந்துகொண்டு எந்த வேலையிலும் முழு கவனமுமின்றி தொலைத்துக்கொண்டிருக்கும் காலங்கள் ! - சில மணி நேரங்களுக்காகவேனும் இயல்பினை, இயற்கையினை ரசிக்கின்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கப்பெறட்டும்

    பதிலளிநீக்கு
  2. //கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
    பிரபஞ்சத்தின் நிசப்தம்//

    நிசப்தத்தைக் கேட்க ஆசை வருகிறது.

    நல்ல கவிதை!

    பதிலளிநீக்கு
  3. இயற்கையை ரசிக்கின்ற மனதுக்கே, இம்மாதிரியான கவிதைகள் தோன்றும். இயற்கையை ரசிக்கின்ற மனதுக்கே இம்மாதிரியான கவிதைகள் பிடிக்கும். எனக்கும் பிடித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ராமலக்ஷ்மி

    இயற்கையின் உணர்வுகளை சத்தமாக வெளியில் அனுப்பும் போது நாம் அத்தனையையும் கேட்டு மகிழ்வதில்லை. கேட்க நமக்குக் கொடுத்து வைப்பதில்லை. சிந்தனை அருமை - வடக்கு வாசலில் பிரசுரமானதற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அழகான புகைப்படம் மற்றும் கவிதை!!

    பதிலளிநீக்கு
  6. தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே
    கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
    பிரபஞ்சத்தின் நிசப்தம்.


    ...very nice. :-)

    பதிலளிநீக்கு
  7. அழகானபடம் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை .. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை. வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  10. உங்கள் கவிதையில் ஒலிக்கின்றன இயற்கையின் இதமான இசைகள் இதயத்தை வருடி... வடக்கு வாசலில் ஏற்கனவே வாசித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. அவசர யுகத்தில் இப்போதெல்லாம் எந்த இயல்புச் சத்தங்களும் கேட்பதில்லையே அக்கா !

    பதிலளிநீக்கு
  12. முடிவு பிரமாதம். வாழ்த்துக்கள். ;-)

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதை ராமலக்ஷ்மி!

    இயற்கையின் மெல்லிய ஓசைகளிலும் நிசப்தத்திலும் உருகி, ரசித்து, பிறக்கும் கவிதைகள் இப்படித்தான் அருமையாக இருக்கும்!

    உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
    விபரங்கள் என் பதிவில்!
    www.muthusidharal.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. பிரபஞ்சத்தின் நிசப்தத்தை ருசிப்பவர்களுக்கே இது போன்ற கவிதை சாத்தியம்!

    பதிலளிநீக்கு
  15. புகைப்படமும், கவிதையும் அழகு,அருமை.வாழ்த்துக்கள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை. மௌன அலறல் போல நிசப்தத்தின் சத்தம்!

    பதிலளிநீக்கு
  17. மிக அழகான அருமையா வரிகள் கவிதையாய் வீற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் மேடம்..

    பதிலளிநீக்கு
  18. சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருப்பவர்கள் இது போன்ற கவிதைகளைப் படித்து பனிச்சாரலில் நனைவதாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    டெக்னாலஜி டெவலப்மெண்ட் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டிருக்கும் சந்தோஷங்கள் இவை.

    பதிலளிநீக்கு
  19. சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. கவிதையும்,படமும் ரசிக்கவைத்தன.

    பதிலளிநீக்கு
  21. ஆயில்யன் said...
    //எஸ்!!! அவசரவசரமாய் சுற்றி திரிந்துகொண்டு எந்த வேலையிலும் முழு கவனமுமின்றி தொலைத்துக்கொண்டிருக்கும் காலங்கள் ! - சில மணி நேரங்களுக்காகவேனும் இயல்பினை, இயற்கையினை ரசிக்கின்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கப்பெறட்டும்//

    ஆம் கிடைக்க வேண்டும் அனைவருக்கும். மிக்க நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  22. அமைதி அப்பா said...
    ***//கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
    பிரபஞ்சத்தின் நிசப்தம்//

    நிசப்தத்தைக் கேட்க ஆசை வருகிறது.

    நல்ல கவிதை!/***

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  23. தமிழ் உதயம் said...
    //இயற்கையை ரசிக்கின்ற மனதுக்கே, இம்மாதிரியான கவிதைகள் தோன்றும். இயற்கையை ரசிக்கின்ற மனதுக்கே இம்மாதிரியான கவிதைகள் பிடிக்கும். எனக்கும் பிடித்துள்ளது.//

    மகிழ்ச்சியும் நன்றியும் தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  24. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்ஷ்மி

    இயற்கையின் உணர்வுகளை சத்தமாக வெளியில் அனுப்பும் போது நாம் அத்தனையையும் கேட்டு மகிழ்வதில்லை. கேட்க நமக்குக் கொடுத்து வைப்பதில்லை. சிந்தனை அருமை - வடக்கு வாசலில் பிரசுரமானதற்கு நல்வாழ்த்துகள்//

    மிக்க நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு
  25. S.Menaga said...
    //அழகான புகைப்படம் மற்றும் கவிதை!!//

    நன்றி மேனகா. புகைப்படம் இணையத்தில் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  26. Chitra said...
    ***/தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே
    கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
    பிரபஞ்சத்தின் நிசப்தம்./


    ...very nice. :-)/***

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  27. Lakshmi said...
    //அழகானபடம் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  28. Rathnavel said...
    //நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க/

    பதிலளிநீக்கு
  29. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //அருமையான கவிதை .. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)//

    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  30. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
    //நல்ல கவிதை. வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி//

    நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  31. குமரி எஸ். நீலகண்டன் said...
    //உங்கள் கவிதையில் ஒலிக்கின்றன இயற்கையின் இதமான இசைகள் இதயத்தை வருடி... வடக்கு வாசலில் ஏற்கனவே வாசித்து விட்டேன்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  32. ஹேமா said...
    //அவசர யுகத்தில் இப்போதெல்லாம் எந்த இயல்புச் சத்தங்களும் கேட்பதில்லையே அக்கா !//

    அதற்கென்றும் நேரம் ஒதுக்குவோம் ஹேமா. நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அன்புடன் அருணா said...
    //கொஞ்சம் லேட்! பூங்கொத்து!!//

    நன்றி அருணா:)!

    பதிலளிநீக்கு
  34. RVS said...
    //முடிவு பிரமாதம். வாழ்த்துக்கள். ;-)//

    நன்றி ஆர் வி எஸ்.

    பதிலளிநீக்கு
  35. சசிகுமார் said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  36. அமைதிச்சாரல் said...
    //அழகுக்கவிதை..//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  37. மனோ சாமிநாதன் said...
    //நல்ல கவிதை ராமலக்ஷ்மி!

    இயற்கையின் மெல்லிய ஓசைகளிலும் நிசப்தத்திலும் உருகி, ரசித்து, பிறக்கும் கவிதைகள் இப்படித்தான் அருமையாக இருக்கும்!

    உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
    விபரங்கள் என் பதிவில்!
    www.muthusidharal.blogspot.com//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன். அழைப்பு விடுத்த அன்புக்கும் எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  38. Kanchana Radhakrishnan said...
    //நல்ல கவிதை.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  39. ஈரோடு கதிர் said...
    //பிரபஞ்சத்தின் நிசப்தத்தை ருசிப்பவர்களுக்கே இது போன்ற கவிதை சாத்தியம்!//

    நன்றி கதிர்:)!

    பதிலளிநீக்கு
  40. asiya omar said...
    //புகைப்படமும், கவிதையும் அழகு,அருமை.வாழ்த்துக்கள் ராமலஷ்மி.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம். said...
    //அருமையான கவிதை. மௌன அலறல் போல நிசப்தத்தின் சத்தம்!//

    ஆம், ஆனால் அலறல் இல்லை:)! நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  42. அன்புடன் மலிக்கா said...
    //மிக அழகான அருமையா வரிகள் கவிதையாய் வீற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் மேடம்..//

    நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  43. திருவாரூர் சரவணன் said...
    //சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருப்பவர்கள் இது போன்ற கவிதைகளைப் படித்து பனிச்சாரலில் நனைவதாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    டெக்னாலஜி டெவலப்மெண்ட் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டிருக்கும் சந்தோஷங்கள் இவை.//

    நன்றி சரவணன். இடம் வலமாய் மிக நளினமாய் மிதந்து இறங்கும் சிறகுகளை தினம் பார்க்கிறேன் இங்கு:)!

    பதிலளிநீக்கு
  44. மாதேவி said...
    //சித்திரை புதுவருடவாழ்த்துகள்.//

    தங்களுக்கும், அனைவருக்கும் என் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. ஸாதிகா said...
    //கவிதையும்,படமும் ரசிக்கவைத்தன.//

    மிக்க நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  46. தமிழ்மணத்திலும் இன்ட்லியிலும் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே
    கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
    பிரபஞ்சத்தின் நிசப்தம்.//

    பிரபஞ்சத்தின் நிசப்தம் உணர வேண்டும் என்றால் அமைதியான இயற்கை சூழ்ந்த இடத்திறகு போக வேண்டும்.

    இருக்கும் இடத்தில் உணர முடிந்தால் அவனை விட பாக்கியசாலி யாரும் இல்லை ராமலக்ஷ்மி.

    பனித்துளி வெடிக்க காத்திருக்கும் பசுமை இலை அழகு.

    பதிலளிநீக்கு
  48. @ கோமதி அரசு,

    மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு