திங்கள், 25 ஜனவரி, 2010

சிறுகதைக்கு ஒரு படம் [ஜனவரி 2010 PiT போட்டிக்கு]

என்ன தலைப்பு வரப் போகிறது எனக் காத்திருக்கையில் புதுமையாய் வந்தது அறிவிப்பு. சர்வேசனின் நச் சிறுகதைப் போட்டியில் முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து அதற்குப் படம் போடச் சொல்லி விட்டார்கள். சவாலை வெல்லும் அளவுக்கு காட்சிகள் கிடைக்காததால் சமாளித்து விட்டிருக்கிறேன்! பொருத்தமாய் இல்லாவிட்டாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்:)!

ஒவ்வொரு கதையிலிருந்தும் எடுக்கப்பட்ட சில வரிகளுடன் படங்கள்..


அதி பிரதாபனின்நறுமணதேவதை’:

தேவதை சிரித்தாள், ”இந்த ஐந்து நொடி வரம் ஐந்து நாளைக்குத்தானப்பா கொடுத்தேன்”!






முரளிக்கண்ணனின்சட்டை’:

மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான். இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா






சதங்காவின்நெல்லிமரம்:

வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம்.


வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள்.



[ஒரு நெல்லிக்கனி கூட இல்லை மரத்தில். சந்தேகமாகவே பார்த்து நின்ற என்னிடம் அது நெல்லிமரம்தான் எனக் கையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்தார்கள் தோட்டத்தில் வேலை செய்தவர்கள்:)!]




நிலாரசிகனின்அப்பா சொன்ன நரிக்கதை’:

சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்.







பின்னோக்கியின் 'வெள்ளை உருவத்தில் வில்லன்':

பயத்தில் “ரம்யா, கீதா” என்று கத்தினாள் “இங்கதாம்மா விளையாடிக்கிட்டு இருக்கோம்” என்ற பதில் கேட்டு கமலாவுக்கு சற்று பதற்றம் குறைந்தது.







ராம்குமார் அமுதனின்கடைசி இரவு’:

முகூர்த்தத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு


கடைசிப் படம் போட்டிக்கு.




அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

62 கருத்துகள்:

  1. நீங்கள் எடுத்த, என் கதைக்கான போட்டோ வெற்றி பெற வாழ்த்துக்கள் (எல்லாம் சுயநலம் தான் :) )

    பதிலளிநீக்கு
  2. பின்னோக்கி said...

    //நீங்கள் எடுத்த, என் கதைக்கான போட்டோ வெற்றி பெற வாழ்த்துக்கள் (எல்லாம் சுயநலம் தான் :) )//

    நல்வாக்கு பலிக்கட்டும்:)! ஆனால் அது டிஜிட்டல் காலம் வரும் முன்னே எடுத்தது. இருந்தாலும் எனக்குப் பிடித்தமானதும் பொருத்தமானதாகத் தோன்றுவதும் அதுவே.

    பதிவுக்கும் வலைப்பூவுக்கும் தந்திருக்கும் முதல் வருகைக்கு நன்றி பின்னோக்கி!

    பதிலளிநீக்கு
  3. எல்லா கதைக்குமே தயார் செய்துட்டீங்க போல.. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி.. எனக்கு முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு..

    பதிலளிநீக்கு
  4. //இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா//


    சட்டை கொஞ்சம் பெருசா இருக்கு :-)))


    ராமலக்ஷ்மி உங்கள் முந்தைய படங்கள் அளவிற்கு இவை இல்லை

    பதிலளிநீக்கு
  5. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //எல்லா கதைக்குமே தயார் செய்துட்டீங்க போல..//

    இன்னும் நாலு கதை இருக்கே:)!

    //வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி..//

    நன்றி.

    // எனக்கு முதல் படம் ரொம்ப பிடிச்சிருக்கு..//

    அப்படீங்றீங்க?? இன்னும் போட்டிக்கு சப்மிட் பண்ணாத நிலையில் குழப்பம் ஸ்டார்ட்டட்:)! எப்படியோ அது பாராட்டைப் பெற்றதே மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல தேர்வு. கண்ணுக்கு குளுமையாக உள்ளது நெல்லிமரம்

    பதிலளிநீக்கு
  7. கிரி said...

    ***/ //இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா//


    சட்டை கொஞ்சம் பெருசா இருக்கு :-)))/***

    யாருக்கு:)?

    கொஞ்சம் பெருசா போடுவதுதான் ஃபேஷன்:)!

    //ராமலக்ஷ்மி உங்கள் முந்தைய படங்கள் அளவிற்கு இவை இல்லை//

    தெரிந்துதான் முன்னறிவிப்பாய் சொல்லியிருக்கிறேன் ஏதோ சமாளித்திருப்பதாக...:)!

    பதிலளிநீக்கு
  8. காட்டிற்குள் அழைத்துச் செல்லும் படம் அழகாய் பொருந்துகிறது

    பதிலளிநீக்கு
  9. அமுதா said...

    //நல்ல தேர்வு. கண்ணுக்கு குளுமையாக உள்ளது நெல்லிமரம்//

    நன்றி அமுதா. அதற்காகவேதான் அந்த இரண்டாவது நெல்லிமரம் படம்.

    பதிலளிநீக்கு
  10. ஈரோடு கதிர் said...

    //காட்டிற்குள் அழைத்துச் செல்லும் படம் அழகாய் பொருந்துகிறது//

    அதுவும் பொருத்தம்தானா:)? கருத்துக்கு மிக்க நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  11. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. goma said...

    //கடைசிப் படம் அருமை.//

    உங்களுக்கும் அதுவே பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி:)!

    பதிலளிநீக்கு
  13. Vidhoosh said...

    //வெற்றி பெற வாழ்த்துக்கள்//

    நன்றி வித்யா!

    பதிலளிநீக்கு
  14. @ பின்னோக்கி,

    மன்னிக்கவும். நான் பொருத்தமானதெனக் கருதி கொடுக்க இருப்பது கடைசிப் படம்ங்க! எல்லாப் படமும் கொடுக்க முடியாதே:)! ஒரு படம்தான் போட்டிக்கு அனுமதி!

    பதிலளிநீக்கு
  15. அழகான படங்கள் சகோதரி.

    முதலாவது படம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  16. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //அழகான படங்கள் சகோதரி.

    முதலாவது படம் மிக அழகு.//

    நன்றி ரிஷான்.

    முதல்படம் இருளில் எடுத்தபடியால் அத்தனை துல்லியமாய் வரவில்லை. ஆனாலும் பிடித்திருந்தபடியால் போட்டிக்குக் கொடுககாமல் பதிவில் சேர்த்து மகிழ்வடைந்தாயிற்று:)!

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...

    பதிலளிநீக்கு
  18. படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் போட்டிக்கான படத்தில் இன்னும் சில துளிகளில் திருமணம் ஆகப் போகும் ஒரு பெண்ணின் உணர்வுகள் கண்களின் வழியே தெரிந்து இருந்தால் நன்றாக இருக்கும்,

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. Sangkavi said...

    //படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...//

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி சங்கவி.

    பதிலளிநீக்கு
  20. தமிழ் பிரியன் said...

    // படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் போட்டிக்கான படத்தில் இன்னும் சில துளிகளில் திருமணம் ஆகப் போகும் ஒரு பெண்ணின் உணர்வுகள் கண்களின் வழியே தெரிந்து இருந்தால் நன்றாக இருக்கும்,

    வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன்.

    நீங்கள் சொல்வது உண்மைதான் அந்த வரிக்கு மட்டுமே படம் என்றால். கதையின் சஸ்பென்ஸுக்கு இப்படி இருப்பதே சரியாக இருக்குமென்பது என் எண்ணமாக இருந்தது:)!

    பதிலளிநீக்கு
  21. நன்றாக உள்ளது. காட்டுக்குள் செல்லும் படம் அழகு.

    பதிலளிநீக்கு
  22. malarvizhi said...

    //நன்றாக உள்ளது. காட்டுக்குள் செல்லும் படம் அழகு.//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மலர்விழி!

    பதிலளிநீக்கு
  23. பலா பட்டறை said...

    //படங்கள் அருமை..:))//

    நன்றி பலா பட்டறை:)!

    பதிலளிநீக்கு
  24. வெள்ளை வில்லன் படமும், நரிக்கதைப் படமும் பொருத்தமாக உள்ளன

    பதிலளிநீக்கு
  25. ஆமாம், அத்தனை துல்லியம் இல்லாவிட்டாலும் வெள்ளை வில்லன் பொருத்தமே. நரிக்கதைக்காக அந்த படத்தை பொருந்துமா எனும் சந்தேகத்துடனேதான் தேர்வு செய்தேன். பலருக்கும் பிடித்து விட்டது:)! கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. கடைசி படம் சூப்பரோ சூப்பர்! வெற்றிக்கு வாழ்த்துக்கள்.(இதுவும் சுய நலம்தான்)

    பதிலளிநீக்கு
  27. நானானி said...

    //கடைசி படம் சூப்பரோ சூப்பர்! வெற்றிக்கு வாழ்த்துக்கள்.(இதுவும் சுய நலம்தான்)//

    போட்டிக்கு அனுப்பியாயிற்று.

    இங்கே உங்கள் சுயநலம் வெல்ல நானும் மனமார வாழ்த்திக் கொள்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  28. Mrs.Menagasathia said...

    //வாழ்த்துக்கள் அக்கா.//

    மிக்க நன்றிங்க Menagasathia!

    பதிலளிநீக்கு
  29. அழகான படங்கள் அக்கா..

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. போட்டிக்கு நீங்கள் அனுப்பிய படம் தான் எனக்குப் பிடித்தது. அடுத்தது மீன் படம் தான் பொருத்தமாகப் பட்டது. முதல் படம் அழகாக இருந்தாலும், தெளிவு குறைவாகஇருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. ராமலக்ஷ்மி,
    உங்கள் எல்லா படமும் பிடிக்கிறது.

    கடைசி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. அனைத்து படங்களின் தேர்வும் அருமை..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. அனைத்துப் படங்களும் அருமை. வரிகளுக்கு ஏற்பப் படங்களைப் பொருத்தி உள்ளீர்கள் ராமலக்ஷ்மி. வாழ்த்துகள்பா.

    பதிலளிநீக்கு
  34. வெள்ளை வில்லன் நல்லாயிருக்குங்க.
    கடைசி படமும் அருமை.
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. எல்லாமே அழகு அக்கா. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. சுசி said...

    //அழகான படங்கள் அக்கா..

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  37. நசரேயன் said...

    //எனக்கு மீன் தொட்டி//

    நன்றி நசரேயன். அந்த உரையாடலுக்குப் பொருத்தமாய் அமைந்து போனது:)!

    பதிலளிநீக்கு
  38. ஜெஸ்வந்தி said...

    // போட்டிக்கு நீங்கள் அனுப்பிய படம் தான் எனக்குப் பிடித்தது. அடுத்தது மீன் படம் தான் பொருத்தமாகப் பட்டது. முதல் படம் அழகாக இருந்தாலும், தெளிவு குறைவாகஇருக்கிறது.//

    நன்றி ஜெஸ்வந்தி. உங்கள் கருத்து சரியே. அதனால்தான் அதைத் தேர்வு செய்யவில்லை.

    பதிலளிநீக்கு
  39. கோமதி அரசு said...

    //ராமலக்ஷ்மி,
    உங்கள் எல்லா படமும் பிடிக்கிறது.

    கடைசி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    படங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றிம்மா!

    பதிலளிநீக்கு
  40. புலவன் புலிகேசி said...

    //அனைத்து படங்களின் தேர்வும் அருமை..வாழ்த்துக்கள்//

    நன்றி புலிகேசி.

    பதிலளிநீக்கு
  41. வல்லிசிம்ஹன் said...

    //அனைத்துப் படங்களும் அருமை. வரிகளுக்கு ஏற்பப் படங்களைப் பொருத்தி உள்ளீர்கள் ராமலக்ஷ்மி. வாழ்த்துகள்பா.//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  42. அம்பிகா said...

    //வெள்ளை வில்லன் நல்லாயிருக்குங்க.
    கடைசி படமும் அருமை.
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  43. ஹுஸைனம்மா said...

    //எல்லாமே அழகு அக்கா. வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

    தங்கள் ரசிப்புக்கு நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  44. பிரியமுடன்...வசந்த் said...

    //கடைசி இரவுக்கான புகைப்படம் நச்..//

    நச் கதைக்கு நச் படம்ங்கிறீங்க:)! நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  45. via mail:

    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'சிறுகதைக்கு ஒரு படம் [ஜனவரி 2010 PiT போட்டிக்கு]' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th January 2010 06:42:02 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/174759

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தமிஷிஷ், தமிழ்மணம் இரண்டிலும் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  46. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஹை ! நம்ம கதைக்கான படங்களும் ஜூப்பரு.

    பதிலளிநீக்கு
  47. சதங்கா (Sathanga) said...

    //போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஹை ! நம்ம கதைக்கான படங்களும் ஜூப்பரு.//

    கனியுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்:)! நன்றி சதங்கா!

    பதிலளிநீக்கு
  48. படங்கள் அட்டகாசம்

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  49. விஜய் said...

    //படங்கள் அட்டகாசம்

    வாழ்த்துக்கள் அக்கா//

    நன்றிகள் விஜய்!

    பதிலளிநீக்கு
  50. வெற்றி பெற வாழ்த்துக்கள், படங்கள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  51. Jaleela said...

    //வெற்றி பெற வாழ்த்துக்கள், படங்கள் அனைத்தும் அருமை//

    வாங்க ஜலீலா. படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி. இருத்தலின் அடையாளமாக கலந்து கொண்டாயிற்று:)! முடிவும் வந்தாயிற்று. வெற்றி அடைந்தவர்கள் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  52. கடைசிப் படமும் அதற்கான கமெண்டும் ரொம்ப நல்லா இருக்கு :-)

    பதிலளிநீக்கு
  53. " உழவன் " " Uzhavan " said...

    //கடைசிப் படமும் அதற்கான கமெண்டும் ரொம்ப நல்லா இருக்கு :-)//

    நன்றி உழவன்! எல்லா கமெண்டுகளுமே அந்தந்த கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளே:)!

    பதிலளிநீக்கு
  54. அந்த மீன் படம் அருமை :) வெற்றி பெற வாழ்த்துகள் பல.

    பதிலளிநீக்கு
  55. நிலாரசிகன் said...

    //அந்த மீன் படம் அருமை :) வெற்றி பெற வாழ்த்துகள் பல.//

    நன்றிகள் நிலாரசிகன்! உங்கள் கதைக்குதான் படம் போடுவது ரொம்ப சவலானாது. அதையும் எப்படியோ சமாளித்து விட்டிருக்கிறேன் பார்த்தீர்களா:)?

    பதிலளிநீக்கு
  56. பாத்திமா ஜொஹ்ரா said...

    //அருமை//

    தொடரும் வருகைக்கு நன்றிகள் பாத்திமா!

    பதிலளிநீக்கு