முத்துச்சரம்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
கூர்மையான உலகம்
1.
நாம் முடிவெடுக்கும் தருணத்தில்,
தயக்கம் முடிவுக்கு வருகிறது.
(தேன் பருந்து)
2.
"உலகத்தைப் பார்த்து நீங்கள்
சிரிக்கத் தொடங்கும் அந்த நொடியில்,
அது உங்கள் மீதான தன் அதிகாரத்தை
இழந்து விடுகிறது."
(கரும்பருந்து)
3.
அமைதியான மனங்களிலேயே
ஆழ்ந்த வலிமை குடிகொள்கிறது.
வியாழன், 23 ஏப்ரல், 2026
தொலைவிலிருந்து கேட்கும் பாடல் - பண்புடன் இணைய இதழில்..
வீ
டு பழகிக் கொண்டது
மெல்லிய சத்தங்களில் பேச-
ஒரு நாற்காலி நகர்வது,
தொண்டையைச் செருமும் கடிகாரம்.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2026
நந்தவனத்தின் அழைப்பு..
1.
"இறக்கைகள் வெறும் எடையை மட்டும் சுமப்பதில்லை,
அவை அடுத்த நந்தவனத்தின் அழைப்பையும்
நம்பிக்கையுடன் ஏந்திச் செல்கின்றன.
"
2.
"
உங்கள் கனவுகள்
உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை,
துணிச்சல் துளிர்விடும் இடத்தில்
அவை உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
"
3.
"
மெளனமான நேரங்கள் வெறுமையானவை அல்ல,
புதன், 15 ஏப்ரல், 2026
போர் ரதங்களின் பாடல்; வெண்மதி இரவு - டு ஃபு சீனக் கவிதைகள் (7,8) - 'பண்புடன்' மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில்..
போர் ரதங்களின் பாடல்
ர
தங்கள் உருளுகின்றன,
கடகடவென அதிர்கின்றன.
குதிரைகள் கனைக்கின்றன,
சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.
படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டி
அணிவகுத்துச் செல்கின்றனர்.
தந்தைமார், தாய்மார்,
மனைவியர் மற்றும் குழந்தைகள்
அவர்களை வழியனுப்ப ஓடி வருகின்றனர்.
அவர்களால் கிளம்பிய தூசியில்
ஞாயிறு, 12 ஏப்ரல், 2026
மாயக் கோடுகள் - பண்புடன் இணைய இதழில்..
சுவர்கள் எப்போதும்
செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,
சில நேரங்களில் அவை எண்ணங்களை
சுவாசித்தும் எழுகின்றன.
இயலாதெனும் தயக்கமும்
வேண்டாமெனும் எச்சரிக்கையும்
வெள்ளி, 3 ஏப்ரல், 2026
தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் [பண்புடன் இதழ்: 10]
1.
தரையில் வெயில்
சூட்டில் சுருளும் பூனை
ஓய்வெடுக்கும் நண்பகல்.
2.
நடுநிசி சன்னல் ஓரம்
நிலவொளியில் பதியும் பாதம்
களவு போகும் இரவு.
3.
சருகுகள் நகரும் ஒலி
தீயாகத் துடிக்கும் வால்
வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.
4.
தீண்டப்படாத பால் கிண்ணம்,
‹
›
முகப்பு
வலையில் காட்டு