ஞாயிறு, 29 ஜூன், 2025

அன்பெனப்படுவது யாதெனில்..

  #1

"சத்தம் மிகுந்த உலகில், 
உங்கள் சகிப்புத் தன்மைதான் 
உண்மையான வலிமை."

#2
"சில நேரங்களில், 
கடந்த காலத்தை விட்டு வெளிவர, 
முன்னோக்கிப் பார்ப்பதுவே ஒரே வழி."


#3
"வாழ்க்கை என்பது பல பாதைகளால் நிரம்பிய பயணம்; 
அதில் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்பது கடினமானது, 
ஆயினும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் 
தெளிவைக் கொண்டு வரும்."

#4
"நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்க, 
நாம் திட்டமிட்ட வாழ்க்கையைக் கைவிட வேண்டி வரும்." 
_ Joseph Campbell

#5
"பாதை மட்டும் முக்கியமல்ல; 
அதில் நாம் எவ்வாறு நடக்கிறோம் என்பதே முக்கியம்."

#6
"கடவுள் பறவைகளை நேசித்து, மரங்களைப் படைத்தார். 
மனிதன் பறவைகளை நேசித்து, கூண்டுகளை உருவாக்கினான்." 
_ Jacques Deval
#7
"அன்பு 
ஒரு மென்மையான பயணம், 
இலக்கல்ல."
*
பறவை பார்ப்போம் - பாகம்: (126)
**
[எனக்கான சேமிப்பாகவும்.. உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது!]
**

7 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் அருமை. 

    சும்மா ஒரு கற்பனை. 

    முதல் படம் மாமியார் பார்வை.  இரண்டாவது படம் இளைத்த மருமகள் களைத்த நடை.  மூன்றாவது படம் கண்டுக்காத கையாலாகாத கணவன் தள்ளி, தூரத்தில்.  நான்காவது படம் மாமியாரும் மாமனாரும்ஆணவத்துடன் !  ஐந்தாவது படமும் ஆறாவது படமும் பேரன் பேத்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கற்பனை :)). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. சிரிப்பு வந்துவிட்டது ஸ்ரீராம். உங்க கற்பனையை நினைத்து!!! பின்ன இதுங்க எல்லாம் ரொம்ப சமத்து !!!!!!!!!!!!!!!!!!!!!!

      ம்ஹூக்கும் அந்தக் கிளி அழகான தேவதைப் பெண் போலத் தெரியலையா!!

      சேவல் படத்துக்கான வரி ரொம்பப் பொருத்தமா சேவல், பின்னாடி ந்அடந்து வரும் தன் குடும்பத்திடம் சொல்வது போல இருக்கு பாரு....ராமலஷ்மி அம்மா சொல்லிருக்கறத கேட்டுக்கங்கன்னு!!

      கீதா

      நீக்கு
  2. அனைத்து படங்களும் அழகு, அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
    அன்பு மென்மையான பயணம் தான்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அத்தனையும் அருமை கூடவே வரிகளும்.

    நாமக்கோழிகள், சிவப்பு மூக்கு ஆள்கட்டிப் பறவை எல்லாம் அழகு.

    இங்கு ஏரிகளில் வரும் பறவகைகளை எடுத்திருக்கிறேன். ஒரு சிலது நன்றாக வந்துள்ளன. சில படங்கள் சரியாக வரவில்லை. இருப்பதைப் பகிர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன் ஆனா இன்னும் தொகுக்கவில்லை காணொளிகளும் நிறைய இருக்கு.

    ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரிகளில் நீங்கள் எடுத்த பறவைகளின் படங்கள், காணொளிகளைக் காணக் காத்திருக்கிறேன். கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு