ஞாயிறு, 27 அக்டோபர், 2024

ஓய்வு நேரம்

  #1

"அனைவரும் ஒன்றாக முன்னோக்கி நகர்ந்தால், 
வெற்றி தானாக வந்து சேரும்."  
_ Henry Ford

#2

"யாரையும் கண்மூடித்தனமாகத் தொடராதீர்கள், 
உண்மையைத் தொடருங்கள்.
_ Brian Michael Good


#3
"எப்போதும் மற்றவர்களுக்காக இருங்கள், 
அதே நேரம்
 உங்களைப் பின் தள்ளி விடாதீர்கள்." 
_  Dodinsky

#4
"நிகழ்ந்த தவறை நினைத்து உழன்று கொண்டிருக்காதீர்கள். 
அடுத்து என்ன செய்வது என்பதில் கவனத்தைச் செலுத்துங்கள். 
முன் நோக்கிச் சென்று விடையை அறிய 
உங்கள் சக்தியை செலவழியுங்கள்."
_ Denis Waitley

#5
"உங்களுக்கு நீங்கள் எப்படி உரிமையாவது 
என்பதை அறிந்து கொள்வதே 
உலகில் உயர்ந்த விஷயம்."  
_ Michel de Montaigne

#6
"நல்ல சகவாசமானது மௌனத்தை ஆறுதலாகவும், 
தனிமையை பகிரப்பட்ட பலமாகவும் மாற்றி 
உடன் இருப்பது."

#7
“அனைத்தையும் தாண்டி எழுந்திடுங்கள், 
மற்றவர்களை விடச் சிறந்தவராக அல்ல, 
உங்களது முந்தைய நிலையை விடச் சிறப்பாக!”

#8
“ஆரோக்கியமான உடலுக்கும், தெளிவான சிந்தனைக்கும், 
அமைதியான ஆன்மாவுக்கும் அவசியமானது 
நமக்காக நாம் செலவழிக்கும் ஓய்வு நேரம்.”

*
பறவை பார்ப்போம்.. - பாகம்: 118

*
[பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.]

*
பாருங்கள் ஜூமில், முதலாம் படத்திலிருக்கும் வாத்து
தொலைவிலிருந்து 
கேமராவை எப்படி நோட்டமிடுகிறது என:)?

*
[ படங்கள் பெங்களூர் கண்ணமங்களா ஏரியில் எடுத்தவை. ]

**

13 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் அழகு. கேம்ராவை நோட்டமிடும் வாத்து அழகு.
    நான் மகள் ஊரில், மற்றும் மகன் அழைத்து போன இடங்களில் ஓடையில் நீந்தும் வாத்துகளை எடுத்து இருக்கிறேன் பதிவு செய்ய வேண்டும்.
    வாத்துகளும் பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் படங்களுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. வாத்துகளிடம் கூட கவனமாக இருக்கவேண்டும் என்று எனக்கு அனுபவம் சொல்லியது!  ஒரு பழைய அனுபவம். நடந்து வந்து கொண்டிருந்த வாத்து,  அதை நான் படமெடுக்க நினைக்கையில் திடீரென தாக்குவது போல் என்னை நோக்கி ஓடி வந்தது.  திகைத்து நின்ற என்னைப் பார்த்து, 'போனால் போகட்டும்' என்று விலகிச் சென்றது.

    தூரத்திலிருந்து சர்வ ஜாக்கிரதையாக கேமிராவைப் பார்க்கும் வாத்தைக் கண்டதும் எனக்கு இது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைத் தாக்குவது போலதான் வந்தது. என்னைத் தாக்கியே விட்டது:). இலங்கை பூங்கா ஒன்றில் வேறொரு பறவையைப் படமாக்கிக் கொண்டிருந்த போது பின்புறமாக வந்து என் காலை வாத்து ஒன்று இருமுறை கவ்விய அனுபவம் குறித்து இந்தப் பதிவில் நேரம் இருந்தால் பார்க்கவும்: https://tamilamudam.blogspot.com/2018/04/2.html [ படம் 15 மற்றும் அதற்கு முந்தைய பத்தி].

      நீக்கு
    2. அட, ஆமாம்... நானும் படித்திருந்திருக்கிறேன்!

      நீக்கு
    3. கேமிராவைப் பார்க்கும் அந்த வாத்தை பார்த்தால் எனக்கு பழையசீவரம் நரசிம்ம ஸ்வாமி கோவில் பட்டரும் நினைவுக்கு வருகிறார்.  தெரியாமல் போட்டோ எடுத்தது போல நான் நினைத்துக் கொண்டிருக்க, வீட்டுக்கு வந்து பார்த்தால் ஸ்வாமி சிலையின் பின்னாலிலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

      நீக்கு
    4. அப்பதிவில் அந்த வாத்து குறித்த உங்கள் கருத்தையும் பிறகு கவனித்தேன்:).

      ஆம், உங்கள் சமீபத்திய பயணத்துப் படம்:). இதனாலேயே சன்னதிகளில் அனுமதி இல்லாமல் படம் எடுக்க மிகவும் தயங்குவேன். பெங்களூரில் சில கோயில்களில் அனுமதிக்கிறார்கள்.

      நீக்கு
  3. படங்கள் அருமை.  வாக்கியங்களும் சரியாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பொன்மொழிகளும் சிறப்பு. தொடரட்டும் தொகுப்பு.

    பதிலளிநீக்கு