ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

எதுவரையிலும்?

#1

“வருங்காலத்தை முன்மதிப்பிட சிறந்த வழி, 
அதை சேர்ந்து உருவாக்குவதே.”
 _ Peter Drucker


#2

“எது வரையிலும் நீங்கள் முயன்றிட வேண்டும்? 
அது வரையிலும். 
உங்கள் இலக்குகளை அடையும் வரையிலும், 
உங்கள் தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் வரையிலும், மீண்டெழுந்து உங்களை கட்டமைத்துக் கொள்ளும் வரையிலும், 
கடந்தவற்றை நினைத்துக் கவலை கொள்ளாத வரையிலும்.”


#3
“நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் 
உலகை மாற்றுங்கள்.”
_  Amy Poehler


#4
“எப்படிக் காத்திருக்க வேண்டுமென்பதை அறிந்தவருக்கு 
அனைத்தும் சரியான நேரத்தில் வந்து சேரும்.”
_ Leo Tolstoy

#5
“உங்கள் ஆன்மாவின் ஆழத்திலிருந்து பாடுங்கள், 
உலகம் உயிர்தெழுவதைக் கவனியுங்கள்.”

#6
மிக வேண்டியவர்களுக்காக உங்கள் நாளிலிருந்து 
சிறிது நேரத்தைக் கூட ஒதுக்க இயலாத அளவுக்கு 
நீங்கள் வேலையாக இருப்பதில்லை. 
நினைத்தால் நேரத்தை உண்டு பண்ண இயலும்.


*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 206
பறவை பார்ப்போம்.. - பாகம்: 117

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

9 கருத்துகள்:

  1. பறவைகளின் படங்களும் பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அருமை. வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பறவைகளின் படங்கள் அனைத்தும் சிறப்பு. படத்திற்கான வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பறவைப் பூங்கா போல உங்கள் தோட்டத்தில்தான் எவ்வளவு விதவிதமான பறவைகள்! குக்குறுவான் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  5. #4 டால்ஸ்டாய் அவர்களது நாவல்களில் புத்துயிர்ப்பு (Resurrection) என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அந்த நாவலின் மைய நாயகன் நெஹ்லுதேவ். பொய் முகங்கள், பாசாங்குகள், மாய்மாலங்கள் இவற்றை வெறுப்பவன். உண்மையாக வாழத் தீவிரமாக முயல்பவன். தனது காதலைத் தீவிரமாகப் பின் தொடர்பவன். பல காலமாகக் காத்திருத்தலிலே, அவனது வாழ்வு கடந்து விடும். அவன் விரும்பியதை அடையக் கூடிய தருணத்தில், அவனே அதிலிருந்து விலகிச் செல்வான். ஏனெனில் காத்திருத்தலின் காலனுபவங்கள் வாழ்வில் எது மதிப்புமிக்கது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுத்து விடும்.

    பொதுவாக ஒன்றை அடைய முடியாத வரையில் தான் அது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. எவ்வளவு தீவிரமாகக் காத்திருந்து தேடிக் கண்டடைகிறோமோ, அவ்வளவாகவே அதன் மதிப்பும் நீடிக்கிறது. கால ஓட்டத்தின் மயக்கத்தில் அதுவும் கரைந்து விடுகிறது. உண்மையில் கடவுளைக் கூட கண்டறிந்து விட்டால் அதுவும் கூட மதிப்பற்றதாக மாறிவிடும் என்பதால் தான் அவர் அவ்வளவு எளிதாகக் காட்சி கொடுப்பதில்லை போலும்!.

    உண்மையில், நாம் வாசிப்பதை, பேசுவதை, கேட்பதை, கற்றறிந்தவற்றைச் செய்வதில்லை, எதை மதிப்பு மிக்கதாக நம்புகிறோமோ அதையே செய்கிறோம் எனத் தோன்றுகிறது.

    ஒவ்வொருவரும் ஒரு கற்பனை மயக்கத்தை மதிப்பு மிக்கதெனக் கருதுகிறோம். அதையே மனதார நம்புகிறோம். பூமி சூரியனைச் சுற்றி வருவது போல அந்த மயக்கத்தையே சுற்றி வருகிறோம்.

    எது மதிப்புமிக்கது, என்பதை அறிவதே காத்திருத்தல் கற்றுத்தருவதாக கற்றுக் கொண்டேன்:).

    மன்னிக்கவும் நீண்ட பின்னூட்டத்திற்கு.
    #1 & # 6ம் கதை சொல்லும் அழகிய படங்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான அலசல். /பொதுவாக ஒன்றை அடைய முடியாத வரையில் தான் அது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. எவ்வளவு தீவிரமாகக் காத்திருந்து தேடிக் கண்டடைகிறோமோ, அவ்வளவாகவே அதன் மதிப்பும் நீடிக்கிறது./ உண்மைதான்.

    சிந்திக்க வைக்கும் விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு