ஞாயிறு, 14 ஜூலை, 2024

சிந்தனைச் சிறை

 #1

“சூழ்நிலைகளால் நீங்கள் பொறியில் சிக்குவதில்லை, 
உங்களது சொந்த சிந்தனையால் சிக்கிக் கொள்கிறீர்கள்.”

#2
“இடையூறுகளை எதிர் கொள்ளத் தயங்காதீர்கள். 
தொடர்ந்து சென்றடையுங்கள்.”
_ Ryan Eggold

#3
“ஒவ்வொரு வேட்டையனும் ஒரு இரை, 
ஒவ்வொரு இரைக்கும் உண்டுஒரு வேட்டையன்.”

#4
“நான் நானாக இருக்க விடுங்கள், 
அதுவொன்றே நானறிந்த வழி.”
Kendrick Lamar

#5
“சினம் வருகையில், நான்கு வரை எண்ணுங்கள், 
சினம் அதிகரிக்கையில், சூளுரையுங்கள்.”
_ Mark Twain

#6
“பிரார்த்தனையின் போது நமது கஷ்டங்களின் மீதன்றி, 
கடவுளின் மீது இருக்கட்டும் கண்கள்.”
_ Oswald Chambers.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 204
*
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
*

 

16 கருத்துகள்:

  1. சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. பொன்மொழிகளும், படங்களும் சிறப்பு. பொன்மொழிகளின் தமிழாக்கம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை. பூனை ஓணானை பிடித்து இருப்பதை பார்க்கும் போது வருத்தமாக இருந்தாலும் அதற்கு இரையாக இறைவன் கொடுத்து இருக்கிறான். ஒவ்வொரு இரைக்கும் ஒரு வேட்டையன் உண்டுதான்.
    பிரார்த்தனை கவலைகளை , துன்பங்களை போக்க என்று இருக்கும் போது கவலையும், துன்பமும் கண் முன்னால் வரும் தான். அதை தள்ளி வைத்து இறைவனை மட்டும் நினைக்க சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஓணான் மற்றும் அணில்களை பூனை வேட்டையாடுவதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கும்.

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. வரிகளைவிட படங்கள் பிரமாதம்.  பொன்மொழிகளை ரசித்தேன்.  நம் சொந்த முயற்சியின்றி சமயங்களில் சூழ்நிலையாலும் பொறியில் சிக்கிக் கொள்கிறோம்!  அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ உண்மைதான். இது சொன்னவர் உதிர்த்த முத்து. அதைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்கள், வரிகள் என அனைத்தும் சிறப்பு. பூனை பிடித்திருக்கும் ஓணான் - வருத்தம் - ஆனாலும் அது தனது உணவை பிடித்திருக்கிறது என்று மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. அவ்வாறே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  7. படங்களும் பொன்மொழிகளும் மிக அருமை. இயற்கையின் பல்வேறு அம்சங்களைப் படம் பிடிக்கும் உங்கள் திறமை வியப்பளித்தாலும் அவற்றுக்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் உங்கள் வீட்டுத் தோட்டத்தின் மீதான வியப்புதான் எனக்கு அதிகமாகிக்கொண்டே போகிறது. :)))

    பதிலளிநீக்கு
  8. #1 //சொந்த சிந்தனைக்குள்// என்பதினுள், மனதில் மறைந்திருக்கும் ஆசை உணர்வுகளின் தூண்டுதல் கூட முக்கிய காரணியாக இருக்கலாம்.

    நம்பிக்கை: இறை பிரசன்னம் நம்மை விட்டு நீங்கும் போது பொறியில் சிக்கிக் கொள்வோம்:).

    #3 கலைஞரது கண்களுக்கும் விருந்து:).

    #5: "Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth". வாசித்ததிலிருந்து.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. #1 உண்மைதான். #3 விருந்தன்று, மருந்து! உலக நியதி, வாழ்க்கைப் பாடமாகப் பதிவாகியுள்ளது:). #5 பகிர்வு அருமை. கருத்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #3 அறிவார்ந்த மறுமொழி!! கூடுதலாக, வாசகத்திற்கும் மேலதிக விளக்கம். ஆனாலும் மருந்து கசப்பு தான்:).

      நீக்கு
    2. கசப்புகளை ஜீரணித்து, கடந்து வருவதுதானே வாழ்க்கை:). நன்றி.

      நீக்கு