செவ்வாய், 30 மே, 2023

யாக்கை - திண்ணை இணைய இதழில்..

யாக்கை

வெறித்து நிற்கிறாள்
போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை.
எக்கவலையுமற்றவன் தருந்துயரும்
தனியொருவளாய்த் தாங்கும் 
அன்றாடத்தின் பாரமும் 
அழுத்துகிறது 
உள்ளத்தையும் 
உடலையும்.
ஒவ்வொரு உறுப்பும்
ஓய்வு கேட்டுக் கெஞ்ச

ஞாயிறு, 28 மே, 2023

வளர்ச்சி

  #1

“மலரும் ஒவ்வொரு பூவும் இயற்கையின் ஆன்மா.”
_ Gérard de Nerval

#2
“ஒவ்வொரு மொட்டும்
ஒரு மலராவதற்கு வேண்டிய அத்தனையையும்
கொண்டுள்ளது.”


#3
“முழுமையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் கிடைக்க

ஞாயிறு, 21 மே, 2023

கண்ணான கண்ணே

 #1

“நான் எத்தனையோ விஷயங்களுக்காக வாழ்வில் பெருமைப் பட்டிருக்கிறேன். ஆனால் அவை எதுவும் பாட்டி எனும் ஸ்தானத்திற்கு முன் ஒன்றுமேயில்லை.”

#2
“சொர்க்கத்தின் ஒரு பகுதியைப் பூமிக்குக் கொண்டு வருகிறார்கள் குழந்தைகள்.”

#3
“மகிழ்ச்சியான குழந்தை பிரகாசமானக் கண்களைக் கொண்டிருக்கிறது. 
உலகத்திற்குள் தன் இதயம் மலர நடந்து வந்து

திங்கள், 8 மே, 2023

தேரி - ராஜேஷ் வைரபாண்டியனின் நாவல் - ஒரு பார்வை - கீற்று மின்னிதழில்..

தேரி. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அற்புதம்! ‘ஒவ்வொரு நாளும் ஒருசில அத்தியாயங்கள்’ என முடிவெடுத்து ஆரம்பித்தேன். ஆயின் ஆவல் மிக, தொடர்ச்சியாக மூன்று தினங்களில் வாசித்து முடித்தேன்.  

காட்சிகளாக விரியும் கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை,  சீரிய எழுத்து நடை, ரசிக்க வைக்கும் வட்டார வழக்கு, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்த சிறப்பு,  நுட்பமானக் கதைப் பின்னல், வாசகரின் ஆர்வத்தைத் தூண்டியபடி சென்று உரிய நேரத்தில் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சுகள்!

சனி, 6 மே, 2023

கஞ்சுகம் - எய்டா லிமான் - சமகாலக் கவிதை - சொல்வனம்: இதழ் 293

 கஞ்சுகம்


தாகப்பட்டது நீங்கள் வனத்துள் 
மடுப்படுக்க விரும்புகிறீர்கள். பைன்மர முட்கள்
விலங்குகளின் கூர்மையான ரோமத்தைப் போல்.
ஏரி ஒன்று மரங்களின் பொய்த்தோற்ற 
சுரங்கப் பாதையின் முடிவில். 

புதன், 3 மே, 2023

மாமழை - கீற்று மின்னிதழில்..


மாமழை

‘ஓ’வென்ற இரைச்சல் 
கோடைச்சாரலின் சடசடப்பை மீறி.
குழந்தைகளோடு 
 பெரியவர் சிலரும்
ஆட்டிக் கொண்டிருந்தார்கள்
கால்களையும் கைகளையும்.
மழையை வரவேற்கிறார்களாம்
மகிழ்ச்சி நடனமாம்
கோமாளிகள்!

இழுத்து யன்னலை மூடிட