புதன், 26 ஏப்ரல், 2023

இருளுக்கு ஒரு சவால் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (24) - 'உதிரிகள்' இளவேனிற்கால இதழில்..


இருளுக்கு ஒரு சவால்

கண்ணில் துப்பாக்கிச் சூடு
மூளையில் துப்பாக்கிச் சூடு
பின்புறத்தில் துப்பாக்கிச் சூடு
துள்ளும் மலர் போல் தூப்பாக்கிச் சூடு

விந்தை எப்படி மரணமானது வெகு சுலபமாக ஜெயிக்கிறது
விந்தை வாழ்வின் முட்டாள்தனமான முறைகளுக்கு
எவ்வளவு நம்பிக்கை கொடுக்கப்படுகிறது

விந்தை எப்படிச் சிரிப்பானது மூழ்கடிப்படுகிறது
விந்தை எப்படித் தீயகுணமானது அத்துணை நிரந்தரமாகிறது

நான் விரைவில் அறிவிக்க வேண்டும்
எனது யுத்தத்தை அவர்களது யுத்தத்தின் மேல்
நான் பற்றிக் கொள்ள வேண்டும்
எனது கடைசித் துண்டு நிலத்தை

எனது வாழ்வு அவர்களது மரணமன்று
எனது மரணம் அவர்களது மரணமன்று...
*

படம்: நன்றியுடன், இணையத்திலிருந்து..
*

"உதிரிகள்" இளவேனிற்கால இதழில் வெளியாகியுள்ள மற்றுமோர் தமிழாக்கக் கவிதை. 

நன்றி உதிரிகள்!

**

தொடர்புடைய முந்தைய பதிவு: வீடுபேறு

***

4 கருத்துகள்: