ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நினைவுகள் நீங்குவதில்லை - தைப்பொங்கல் வாழ்த்துகள்!

Table Top படங்கள் ஏழு! 

#1
"அன்றலர்ந்த மலர்கள், அன்றாட சூரிய உதயம் 
இவற்றின் முக்கியத்துவத்தைக் 
குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்."

#2
"மகிழ்ச்சியான நேரங்கள் வரும் போகும். ஆனால், 
நினைவுகள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்."
[ Y for Yashica - D  
19 ஆகஸ்ட் 2022 உலக கேமரா தினத்தின்று பகிர்ந்த படம்]

#3
"கடவுள் நீ கேட்பதை எல்லாம் கொடுப்பதில்லை. ஆனால், 
அவை கிடைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்."
[ முகலிங்கம் ]
#4
"ஆன்மீகம் என்பது உனக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை
 உயிர்ப்புடன் வைத்திருப்பது."
[ கருடாழ்வார் ]

#5
"எதுவும் தோல்வி அல்ல, 
அனைத்திலும் கற்கிறோம் ஒரு பாடம்."

#6
"ஒரு கலாச்சாரத்தின் சிறப்பை 
அதன் பண்டிகைகளில் காணலாம்."

[2022 தீபாவளிக்கு ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்த படங்கள்..]

#7

*
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
**
வீட்டு விளைச்சல்..!
அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

***

8 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    அனைத்து படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அதற்கான வரிகளும் அருமை. தாமதமான பொங்கல் வாழ்த்துகள்! இன்றும் பொங்கல்தானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆம் என்றும் பொங்கல்தான்:) நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் வாழ்த்துகள். உங்கள் வீட்டு மஞ்சள் விளைச்சல் நன்று.

    படங்கள் வாசகங்களுடன் அருமை.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகளுக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு