வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நான் புத்தரைப் பிரார்த்திக்கும் பொழுதுகளில்.. - கோபயஷி இஸா ஜப்பானியத் துளிப்பாக்கள்

இன்று செப்டம்பர் 30, சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்!


1.
நான் புத்தரைப் பிரார்த்திக்கும் பொழுதுகளில் எல்லாம்
கொன்று கொண்டேயிருக்கிறேன்
கொசுக்களை.

2.
பூச்சிகளிலும் கூட
சிலவற்றால் பாட முடிகிறது
சிலவற்றால் முடிவதில்லை.

3.
என் காதருகில் கொசு

திங்கள், 26 செப்டம்பர், 2022

பெயரில்லாத மலை - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஒன்பது) மற்றும் 'ஹைக்கூ - ஒரு சிறு குறிப்பு'

 

ஹைக்கூ - ஒரு சிறு குறிப்பு

ஹைக்கூ (Haiku) என்பது மூன்று சொற்றொடர்களில், முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் எனப் பதினேழு நேரசை நிரையசைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பானிய மொழிக்கலவையாகத் தோன்றி, ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு ஹைக்கை என்று திரிந்து, பிறகு ஹைக்கூ என அழைக்கப் படலாயிற்று. ஜப்பானிய மொழியில் ஹைக்கூ கவிதைகளின் மூன்று சொற்றொடர்களும் ஒரே வரியில் எழுதப்பட்டிருக்க, அதன் ஆங்கில மொழியாக்கம் அனைத்தும் 3 வரிகளில் அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது. 

17_ஆம் நூற்றாண்டில்  மட்சுவோ பாஷோ (Matsuo Bashō) மற்றும் ஊஜிமா ஒனிட்சுரா (Uejima Onitsura) ஆகிய இருவரும் இக்கவிதை வடிவத்திற்கு மெருகூட்ட ஹைக்கூ அதன் தனித்தன்மைக்காகப் பிரபலம் அடைந்தது. 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

கனவுகளைத் தொடர்ந்திடு, வழிதனை அவை அறியும்!

 கருப்பு வெள்ளைப் படங்கள் என்றைக்குமே தனி அழகுதான்!  

இந்த வாரத் தொகுப்பாக படங்கள் ஆறு!


#1
“உலகை மாற்றிட உன் புன்னகையை உபயோகித்திடு, 
உன் புன்னகையை உலகம்  மாற்றிட அனுமதியாதே!”

#2
“இயற்கையைக் கண்டு பிடிப்பதன் மூலம் 
உங்களை நீங்களே கண்டு பிடிக்கிறீர்கள்!”

#3
    ‘உன் இயல்பு எதுவோ 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

அன்பின் சக்தி

  #1

"ஒவ்வொரு எதிர்காலமும் 
வெகுதொலைவில் இல்லை."

#2
"இயற்கை அன்னையின் அழகை 
ஒளிப்படக் கருவியில் பதிவதைப் போலொரு 
திருப்தியும் உந்துதலும் வேறெதிலும் கிடைப்பதில்லை."
[19 ஆகஸ்ட், உலக ஒளிப்பட தினத்தன்று 
ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படம்.]

#3
“பொறுமையை இழப்பதென்பது

புதன், 14 செப்டம்பர், 2022

ஒரு கணம் நாம் இழக்கலாம் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையை - வாங் யென் - சீனக் கவிதை - சொல்வனம்: இதழ் 278

ஒரு கணம் நாம் இழக்கலாம் 
வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையை

ட்சத்திர வெளிச்சம் மங்கும் வேளையிலும் கூட, என்னால் இன்னும் பார்க்க முடிகிறது
ஒளிரும் உன் உதடுகளையும் கண்களையும்,
உனது கைகளில் ஒன்று முழங்காலோடு பிணைந்திருக்க, மற்றொன்று

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

உண்மையான மகிழ்ச்சி

 #1

“மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள். 
பெரும்பாலான பிரச்சனைகளுக்குப் பேச்சு வார்த்தையே  தீர்வாகும்.”

 #2

“உங்கள் கனவுகள் உங்களை அச்சுறுத்தவில்லையெனில், 
அவை அத்தனை பெரிதாக இல்லை என்றே அர்த்தமாகும்.”
_Ellen Johnson Sirleaf

#3
“ஒரு வழியைக் கண்டுபிடிக்க

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

செயல் திட்டம்

 #1

“நன்றியுடையவர்களாக இருங்கள், 
மேலும் நன்றியுடையவராகிடும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.”

#2
“திட்டம் வெற்றி பெறவில்லையெனில்,  
இலக்கினை அல்ல, திட்டத்தை மாற்றிப் பாருங்கள்.”

#3.
“வாழ்க்கையில் முன்னேற்றம் 
வாய்ப்புகளால் அல்ல,