வெள்ளி, 31 டிசம்பர், 2021

2021 - தூறல்: 41



வேகமாக விடை பெற்ற 2021_யைத் திரும்பிப் பார்க்கிறேன்.

னது ஃப்ளிக்கர் பக்கத்தில் “ Uploads of 2021 ” எனத் தனி ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்ததால், அது 365 நாட்களில் 261 நாட்கள் நான் படங்கள் பதிந்து வந்திருக்கிறேன் எனக் கணக்குக் காட்டுகிறது :)! 

#

வழக்கமான இயற்கை மற்றும் பறவைகள் படங்களோடு, கொலுப் பொம்மைத் தொடரும், கார்த்திகை தீபத் தொடரும் நான் ரசித்துப் பதிந்தவை.

பிப்ரவரி மாதத்தில் ஃப்ளிக்கர் பக்கம் 50 இலட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்தது ஒரு மைல் கல்.  

புதன், 22 டிசம்பர், 2021

கருங்கரிச்சானும் சாம்பல் கரிச்சானும்

 ருப்பு அல்லது ஆழ்ந்த சாம்பல் நிறத்தில் பிளவு பட்ட வாலுடன் காணப்படுபவை கரிச்சான் அல்லது இரட்டைவால் குருவிகள். இவற்றைப் பற்றி முன்னரே இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2017/04/black-drango.html விரிவாகப் பகிர்ந்துள்ளேன்.  கடந்த சில வருடங்களாக அவற்றைத் தொடர்ந்து கவனித்து வந்ததில் மேலும் பல சுவாரஸ்யமான விவரங்களைத் தேடித் தெரிந்து கொண்டேன். 

உலகெங்கிலும் சுமார் 27 வகைக் கரிச்சான்கள் உள்ளன. அதில் ஒன்பது வகைகள் இந்தியாவில் தென்படுகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் 6 வகை கரிச்சான்களைப் பார்க்க முடிகிறது. என் வீட்டுத் தோட்டத்திற்கோ மாறி மாறி வருகை புரிகின்றன 2 வகைகள்: கருங்கரிச்சானும் சாம்பல் கரிச்சானும்.. 

#A

சாம்பல் கரிச்சான் - Ashy Drongo


#B

கருங்கரிச்சான்- Black Drongo

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

பெரும் சவால்

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 119

பறவை பார்ப்போம் - பாகம்: (76)

#1

"நீங்கள் எப்போதும் ஆசைப்பட்ட இடத்தை 
ஓர் நாள் அடைந்தே தீருவீர்கள். 
நம்பிக்கையுடன் இருங்கள்."


#2
 'ஒரு நேரத்தில் ஒரு குச்சி. 
ஒரு பறவை கூடு கட்டுவதைப் போன்று.' 
_ Carol Lovekin 


#3
“உங்கள் இலக்கில் உறுதியாய் இருங்கள். 
ஆனால்

புதன், 15 டிசம்பர், 2021

சுடரே விளக்காம் - தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம் ( பாகம் 2)

 #1

ஓம் சுடரே விளக்காம் தூயோய் போற்றி!


#2
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி!


#3
ஓம் அருள் விளக்கே அருட்சுடரே போற்றி!

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

சுதந்திரத்தின் விலை

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 118

பறவை பார்ப்போம் - பாகம்: (75)

#1
"நீங்கள் கவலைப்படுகிற பல விஷயங்கள் 
உண்மையில் நடக்கவே போவதில்லை."


#2
"களங்கமின்மை என்பது எந்த ஒரு விஷயத்தையும் 
அது என்னவாக உள்ளதோ 
அவ்வாறாகவே பார்க்கும் திறன் வாய்ந்தது."



#3
'எதையும் மறைக்காதீர்கள், 

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

முதற்படி

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 117

பறவை பார்ப்போம் - பாகம்: (74)

#1

 “சம்மதம் தெரிவியுங்கள், 
வழியை அதன் பிறகு கண்டடைவீர்கள்.”
_Tina Fey


#2
“முன் நோக்கிச் செல்வதே வாழ்வில் முக்கியம், 
கடந்த காலம் நம்மை இழுத்துப் பிடிக்கும் நங்கூரம்.”


#3

“அறிவை விடவும்