ஞாயிறு, 17 அக்டோபர், 2021

மனத் திட்பம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 116

#1
"இதயம் என்பது என்ன? 
ஒரு பூப் பூப்பது." 
_Rumi


#2
‘அழகிய மலர்களைக் கண்டு களிக்க 
முதலில் அவை பயிரிடப்பட வேண்டும்.’


#3
'நாம் கேட்கின்ற ஒவ்வொன்றும் 
ஒரு கருத்தே அன்றி 
மெய் அன்று. 
நாம் பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒரு கோணமே அன்றி 
உண்மை அன்று.'
_ Marcus Aurelius

#4
"எந்தத் தடை அரணும் 
உங்கள் மன உறுதியை விட 
உயரமானதன்று."
_Harshal Batra


 #5
“உண்மையில் இயற்கை தானாகவே அதி அழகான படங்களை 
உருவாக்கிக் கொள்கிறது. 
நான் கோணங்களை மட்டுமே தெரிவு செய்கிறேன்.”
_Katja Michael

19 ஆகஸ்ட் 2021 உலகப் புகைப்பட தினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம் :)!

**

பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..

***

10 கருத்துகள்:

  1. (3) மார்க்கஸ் சொல்லி இருப்பது நம்மூர் கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்.  தீர விசாரித்து அறிவதே மெய்!

    படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. பொன் மொழிகள் அருமை, மலர்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் பொன்மொழிகளும் சிறப்பு. தொகுத்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு